twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தடைகோரிய தமிழக அரசு.. மத்திய அரசின் பதில் என்ன? திட்டமிட்டபடி வெளியாகிறதா தி ஃபேமிலி மேன் 2?

    |

    சென்னை: ஒரு பக்கம் எதிர்பார்ப்பு.. ஒரு பக்கம் எதிர்ப்பு.. மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்த தடை கோரிக்கைக்கு என்ன விளக்கம் கிடைத்தது என்றும் தெரியவில்லை. திட்டமிட்டபடி வரும் ஜூன் 4ம் தேதி தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் வெளியாகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    Recommended Video

    அசத்தலாக களமிறங்கிய Samantha Family Man 2 Trailer | Manoj Bajpai

    இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், சந்தீப் கிஷன், பிரியாமணி நடித்த முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    வியக்க வைக்கும் படங்கள், வெப் தொடர்களுடன் Sony Liv.. பிரபல தயாரிப்பாளர் ட்வீட் வியக்க வைக்கும் படங்கள், வெப் தொடர்களுடன் Sony Liv.. பிரபல தயாரிப்பாளர் ட்வீட்

    இரண்டாம் பாகத்தில் சமந்தா ஈழத்தமிழராக நடித்து இருப்பது விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு படுத்தி உள்ளனரா என்கிற சந்தேகத்தை கிளப்பி தமிழ்நாட்டில் அது சர்ச்சையாக வெடித்தது.

    தடை செய்ய வேண்டும்

    தடை செய்ய வேண்டும்

    தி ஃபேமிலி மேன் 2 டிரைலர் வெளியாகி பல மில்லியன் வியூஸ் பெற்று வைரலான நிலையில், அந்த டிரைலரில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் சர்ச்சையை கிளப்பின. விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக காட்டி உள்ளனர் என்று வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

    மத்திய அரசுக்கு கடிதம்

    மத்திய அரசுக்கு கடிதம்

    தமிழக அரசு சார்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார். தமிழ்நாடு அரசே நேரடியாக இந்த விவகாரத்தில் நுழைந்ததை அடுத்து அதன் இயக்குநர்கள் விளக்கம் ஒன்றை அளித்தனர்.

    தமிழர்களை புண்படுத்தாது

    தமிழர்களை புண்படுத்தாது

    தி ஃபேமிலி மேன் 2 இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து இதுதொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், இந்த வெப்சீரிஸை உருவாக்க கடும் உழைப்பை போட்டுள்ளோம். மேலும், தமிழ் மக்களின் மனதை எந்த விதத்திலும் இந்த வெப்சீரிஸ் புண்படுத்தாது. முதல் சீசனில் இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தை எப்படி நடு நிலைமையோடு கையாண்டோமோ அதே போலத்தான் இந்த தொடரும் இருக்கும்.

    நிச்சயம் பாராட்டுவீங்க

    நிச்சயம் பாராட்டுவீங்க

    இந்த வெப் தொடர் வெளியாகும் வரை அமைதியாக இருங்க, நிச்சயம் வெளியான பிறகு பார்த்து விட்டு பாராட்டுவீங்க என கூறியிருந்தனர். இந்த வெப் தொடரில் நடித்த நடிகை சமந்தாவுக்கு எதிராகவும் ஏகப்பட்ட கண்டனங்கள் எழுந்தன. அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதியுடனும் நம்பிக்கையுடனும் காத்திருங்கள் என்று கூறியிருந்தார்.

    எகிறும் எதிர்பார்ப்பு

    எகிறும் எதிர்பார்ப்பு

    இந்நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் 14வது சீசன் பிரபலங்களான ரூபினா திலக் மற்றும் அபினவ் சுக்லா இந்த தொடருக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி ஒளிபரப்பாகவுள்ள தி ஃபேமிலி மேன் 2வுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்தனர்.

    திட்டமிட்டபடி வெளியாகுமா?

    திட்டமிட்டபடி வெளியாகுமா?

    தமிழக அரசின் கடிதத்திற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் பதில் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. தமிழகத்திலும் தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என்கிற எதிர்ப்புகள் இயக்குநர்களின் விளக்கத்திற்கு பிறகு குறைந்து விட்டதை போலத்தான் தெரிகிறது. இதன் காரணமாக வரும் ஜூன் 4ம் தேதி திட்டமிட்டபடி தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் வெளியாகும் என்றே தெரிகிறது. ரிலீசுக்கு பிறகு ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருந்தால் மீண்டும் சர்ச்சைகள் வெடிக்கும்.

    English summary
    The Family Man 2 controversy is slowed down in Tamil Nadu and the makers are happy and ready to release the webseries on June 4th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X