»   »  நடிகர் சங்க கட்டிட விதிமீறல் வழக்கு: விஷாலுக்கு நிம்மதி அளித்த ஆய்வறிக்கை

நடிகர் சங்க கட்டிட விதிமீறல் வழக்கு: விஷாலுக்கு நிம்மதி அளித்த ஆய்வறிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படவில்லை என்று ஆய்வுக் குழுவின் வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை தி. நகரில் நடிகர் சங்க கட்டிட கட்டுமானப் பணிகள் துவங்கியது. இந்நிலையில் கட்டிடம் வர உள்ள இடத்தில் பொது சாலையில் 33 அடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை, வழக்கறிஞர் ஸ்ரீரங்கன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

No rules violation in Nadigar Sangam building construction

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்க கட்டிடம் அமையவிருக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வழக்கறிஞர் ஆணையர் கே. இளங்கோவனுக்கு உத்தரவிட்டது.

மேலும் ஆய்வறிக்கையை சமர்பிக்கும் வரை கட்டுமானப் பணி மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில் இளங்கோவன் தனது ஆய்வறிக்கையை இன்று சமர்பித்துள்ளார்.

அதில், நடிகர் சங்க கட்டிடத்தில் விதிமீறல் இல்லை. பொது சாலை ஆக்கிரமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.

English summary
Advocate Commissioner Elangovan who conducted a research in the site where Nadigar Sangam building is coming and submitted his report in the Chennai high court today. A case was filed citing Nadigar Sangam management encroached upon public road to construct the building.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil