»   »  என் படத்தில் ரஜினியை இழிவுபடுத்தும்படி காட்சிகள் இல்லை! - சீனிவாசன்

என் படத்தில் ரஜினியை இழிவுபடுத்தும்படி காட்சிகள் இல்லை! - சீனிவாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லிங்கா பட விநியோகஸ்தர்கள் சிலர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினியை அவமதிக்கும் காட்சிகள் இல்லை என்று நடிகர் சீனிவாசன் தெரிவித்தார்.

நடிகர் சீனிவாசன்? அதாங்க பவர் ஸ்டார்... அவரை வைத்து லிங்கா விநியோகஸ்தர்கள் சிலர் புதுப்படம் எடுக்கிறார்கள். படத்தின் கதை, லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் நடத்திய போராட்டம்தானாம்.

மறுப்பு

மறுப்பு

இந்தப் படத்தில் சீனிவாசன் மூலம் ரஜினியை அவதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

ஆனால் இதனை மறுத்துள்ளார் சீனிவாசன்.

இதான் கதை

இதான் கதை

அவர் கூறுகையில், "லிங்கா விநியோகஸ்தர்கள் எடுக்கும் படத்தில் நான் கதாநாயகனாக நடிப்பது உண்மைதான். இது முழுக்க காமெடி படம். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் எனக்கு திடீரென ஒரு படம் தோல்வி அடைகிறது. அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தேனா என்பதை காமெடியாக சொல்கிறோம்.

அவமதிக்கவில்லை

அவமதிக்கவில்லை

இந்த படத்தில் ரஜினியை அவமதிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை. இதை நிபந்தனையாக வைத்துதான் இந்த படத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

வந்தேன்டா பால்காரன்

வந்தேன்டா பால்காரன்

ஆனால் ரஜினி படத்திலிருந்து ஒரு பாடலை இதில் பயன்படுத்துகிறோம். வந்தேன்டா பால்காரன் பாடலை, வந்தேன்டா பவர்காரன் என மாற்றி பயன்படுத்துகிறோம், என்றார்.

English summary
Actor Srinivasan says that there is no scenes insulting Rajinikanth in his next movie producing by Lingaa distributors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil