»   »  தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை!- ஆர்கே செல்வமணி

தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை!- ஆர்கே செல்வமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஃபெப்சி ஸ்ட்ரைக் காரணமாக தமிழகத்தில் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை என்று ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் காரணமாக ஃபெப்சி அமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

No shootoings today - RK Selvamani

இதனால் 35 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ரஜினியின் காலை, விஜய்யின் மெர்சல் படங்களும் அடங்கும்.

ஆனால் விஷால் படம் உள்ளிட்ட எட்டுப் படங்களின் படப்பிடிப்புகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஆர்கே செல்வமணி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

"ஃபெப்சி ஸ்ட்ரைக் அறிவித்த பிறகு தமிழகத்தில் எங்கும் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இது தெரியாமல் இங்கே படப்பிடிப்பு நடக்கிறது, அங்கே படப்பிடிப்பு நடக்கிறது என தவறான தகவல்களை சிலர் பரப்பிக் கொண்டுள்ளனர். பிரச்சினை தீரும் வரை படப்பிடிப்புகள் நடக்காது. தவறான செய்திகளை யாரும் பரப்பிவிட வேண்டாம்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Fefsi president RK Selvamani says that all shootings are cancelled due to Fefsi strike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X