»   »  'வந்து... விஜய் படத்துக்கு சிறப்பு அனுமதி இல்லைங்க... தயாரிப்பாளர் நலன் கருதி..!' - துரைராஜ்

'வந்து... விஜய் படத்துக்கு சிறப்பு அனுமதி இல்லைங்க... தயாரிப்பாளர் நலன் கருதி..!' - துரைராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்துக்கு வேணாம் - விஜய்க்கு வேணும் : அது என்ன?- வீடியோ

விஜய் படத்தின் ஷூட்டிங்குக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் துரைராஜ். மாறாக தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கா, மீதி இருந்த சில காட்சிகளை மட்டும் படமாக்க அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துரைராஜ் கூறுகையில், "16ம்தேதி முதல் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

No special Permission for Vijay movie shoot

ஆனால் ஓரிரு நாள் படப்பிடிப்பு முடித்து செட்டைக் கலைக்க வேண்டிய நிலையில் அல்லது ஷெட்யூல் முடிக்க வேண்டிய சூழலில் உள்ள படங்களை மட்டும் ஆய்வு செய்து, மீதி ஷூட்டிங்கை முடித்துக் கொள்ள அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் படம், சமுத்திரக்கனி இயக்கும் படம் மற்றும் இன்னொரு படத்துக்கு ஓரிரு நாட்கள் வேலை பாக்கி இருந்தன. அதை முடித்துவிட்டால் ஷெட்யூல் முடிந்துவிடும் என்பதால் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் நலன் கருதியே இந்த அனுமதி. இது சிறப்பு அனுமதி எல்லாம் கிடையாது," என்றார்.

English summary
In an explanation, Producers Council said that there was no special Permission for Vijay movie shoot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X