»   »  நடிகர் சங்கத்தில் பிளவா... யார் சொன்னது... இல்லவே இல்லை! - விஷால்

நடிகர் சங்கத்தில் பிளவா... யார் சொன்னது... இல்லவே இல்லை! - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தில் எந்தவிதப் பிளவும் இல்லை என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசர் தலைமையிலான நிர்வாகத்தின் நடிகர் சங்கப் பொதுக்குழு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சங்க உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

No split in Nadigar Sangam, says Vishal

இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்ட தினத்தில் பொன்வண்ணனின் நடவடிக்கைகள் விஷால் அணி ஆதரவாளர்களை அதிருப்தியடை வைத்ததாகவும், குறிப்பாக இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான ஜேகே ரித்தீஷின் கடும் அதிருப்திக்கு உள்ளானதாகவும், இதனால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், விஷால், "நாசர் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதை இலக்காகக் கொண்டு பயணித்து வருகிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று வெளியாகிவரும் செய்தியில் துளியும் உண்மையில்லை. அப்படி பிளவு ஏற்படுத்த யாராலும் முடியாது...," என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actor Vishal has denied that there is no split in Nadigar Sangam and Vice president Ponvannan is still with them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil