»   »  சூர்யாவா, விஜய்யா?: நான் யாருக்குமே கதை சொல்லவில்லையே... ரஞ்சித்

சூர்யாவா, விஜய்யா?: நான் யாருக்குமே கதை சொல்லவில்லையே... ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் எந்த ஒரு ஹீரோவுக்கும் கதை சொல்லவில்லை என்று கபாலி பட புகழ் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கபாலி படத்தை அடுத்து ரஞ்சித் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க உள்ளார் என்று தான் கோடம்பாக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ரஞ்சித் சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்புகிறார். சூர்யாவோ முத்தையாவுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்.

No Suriya, No Vijay for Ranjith

இதற்கிடையே விஜய் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறார். இந்நிலையில் ரஞ்சித் சூர்யாவுக்கு கதை சொன்னதாகவும் அவர் கதையில் மாற்றம் செய்யுமாறு கூறியதாகவும் செய்திகள் வெளியானகின.

சூர்யா கதையை மாற்றச் சொன்னதால் ரஞ்சித் கடுப்பாகி விஜய்யை வைத்து படம் எடுக்கப் போவதாக கூறப்பட்டது. இது குறித்து ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக கூறியிருப்பதாவது,

நான் எந்த ஒரு ஹீரோவிடமும் கதை சொல்லவில்லை. அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதுவதில் பிசியாக உள்ளேன். அதை முடித்த பிறகு நானே அறிவிப்பு வெளியிடுகிறேன். அதுவரை தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

English summary
Director Ranjith has confirmed that he has not narrated story to any hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil