»   »  பாகுபலி 2-ம் பாகத்தில் சூர்யா நடிக்கிறாரா? - எஸ்எஸ் ராஜமவுலி விளக்கம்

பாகுபலி 2-ம் பாகத்தில் சூர்யா நடிக்கிறாரா? - எஸ்எஸ் ராஜமவுலி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்கப் போவதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ராஜமவுலி.

‘நான் ஈ' படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘பாகுபலி'.

பெருமைக்குரிய படைப்பு

பெருமைக்குரிய படைப்பு

இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்திய திரையுலகின் பெருமைக்குரிய படைப்பாக இப்படம் கருதப்படுகிறது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இரண்டு பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் 45 சதவிகிதம் முடிந்துவிட்டது. வரும் 2016-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் படம் வெளியாகிவிடும்.

சூர்யா

சூர்யா

இதன் இரண்டாம் பாகத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. காரணம், இதன் முதல் பாகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் சூர்யா பிரதானமாகக் கலந்து கொண்டார். அதை வைத்து இப்படி ஒரு கதை பரவியது.

மறுப்பு

மறுப்பு

ஆனால் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

‘பாகுபலி' இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்கவில்லை. சூர்யா பற்றி வந்த செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று ராஜமௌலி," கூறியிருக்கிறார்.

English summary
Director SS Rajamouli denied reports about Surya's role in Bahubali 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil