»   »  இன்னும் பெங்களூர் தியேட்டர்களில் 'நோ' தமிழ் படங்கள், டிவியில் 'நோ' தமிழ் சேனல்கள்

இன்னும் பெங்களூர் தியேட்டர்களில் 'நோ' தமிழ் படங்கள், டிவியில் 'நோ' தமிழ் சேனல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: காவிரி பிரச்சனையையொட்டி பெங்களூரில் உள்ள தியேட்டர்களில் தமிழ் படங்கள் ஓடவில்லை. கேபிள் டிவியில் தமிழ் சேனல்கள் வருவது இல்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. பெங்களூரில் கன்னட அமைப்புகள் தமிழர்களின் உடைமைகளை தேடித் தேடி தாக்கி சேதப்படுத்தின.

மேலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டதுடன், தீ வைத்தும் எரிக்கப்பட்டன.

பெங்களூர் தியேட்டர்

பெங்களூர் தியேட்டர்

கர்நாடக மாநிலத்தில் காவிரி பிரச்சனை தொடர்பாக கடந்த 9ம் தேதி முழு அடைப்பு போரட்டம் நடத்தப்பட்டது. அதில் இருந்து நேற்று வரை பெங்களூரில் உள்ள தியேட்டர்களில் தமிழ் படங்கள் திரையிடப்படவில்லை.

இன்று தான்

இன்று தான்

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிங்கராஜபுரத்தில்(கே.ஆர். புரம்) உள்ள அம்ருத் தியேட்டரில் இன்று இருமுகன் திரையிடப்படுகிறது. இதை தவிர பெங்களூரில் எந்த தியேட்டரிலும் தமிழ் படங்கள் ஓடவில்லை.

கேபிள் டிவி

கேபிள் டிவி

கர்நாடகாவில் கடந்த 9ம் தேதி முதல் அதாவது முழு அடைப்பு போராட்டம் நடந்ததில் இருந்தே கேபிள் டிவிகளில் தமிழ் சேனல்கள் எதுவும் ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

ரஜினி

போராட்டத்தின்போது சிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போஸ்டர்களை கிழித்தனர். இந்நிலையில் சோதனை அடிப்படை போன்று அம்ருத் தியேட்டரில் இன்று இருமுகன் திரையிடப்படுகிறது.

English summary
After the bandh, theatres in Bengaluru are not showing Tamil movies. Similarly, cable TV operators are not providing tamil TV channels in Bengaluru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil