»   »  நாளை தியேட்டர்கள் ஸ்ட்ரைக் இல்லை - அபிராமி ராமநாதன்

நாளை தியேட்டர்கள் ஸ்ட்ரைக் இல்லை - அபிராமி ராமநாதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாளை தியேட்டர் ஸ்ட்ரைக் இல்லை- வீடியோ

சென்னை: கியூப் மற்றும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து திரைத்துறையினர் 16-ம் தேதி முதல் முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் தியேட்டர் முதலாளிகளும், ஊழியர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த ஸ்ட்ரைக்கில் தியேட்டர்கள் கலந்துகொள்ளாது என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரச்னைகளுக்காக

பல்வேறு பிரச்னைகளுக்காக

கியூப் கட்டண உயர்வு உட்பட பல பிரச்னைகளுக்காக தமிழ்த் திரையுலகினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 1 முதல் எந்தத் திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படமாட்டாது என அறிவித்து அதன் படி செயல்பட்டு வருகின்றனர்.

முழு ஸ்ட்ரைக்

முழு ஸ்ட்ரைக்

இந்த ஸ்ட்ரைக்கை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால் மார்ச் 16 (நாளை) முதல் ஷூட்டிங், சினிமா விழாக்கள் என எதுவுமே நடைபெறாது என அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

சந்திப்பு

சந்திப்பு

இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் இயங்கும் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட 147 திரையரங்கு தொடர்பானவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது திரையுலக பிரச்னைகள் பற்றி விவாவதிக்கப்பட்டுள்ளன.

ஸ்ட்ரைக்கில் கலந்துகொள்ளவில்லை

ஸ்ட்ரைக்கில் கலந்துகொள்ளவில்லை

அதன்பிறகு, தியேட்டர் ஸ்ட்ரைக்கில் தாங்கள் கலந்து கொள்வதில்லை என்றும் தியேட்டரில் பழைய படங்கள் மற்றும் ஹாலிவுட், பாலிவுட், தெலுங்கு உட்பட பிற மொழி படங்கள் வெளியிட உள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

English summary
"No theater strike on March 16", says theater owners association president Abirami Ramanathan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X