Just In
- 47 min ago
கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா? டிரெண்டாகும் #Thalapathy65
- 1 hr ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 1 hr ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 1 hr ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
Don't Miss!
- News
"நிலைமை" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..?
- Finance
கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..!
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனாவுக்கு முன் மண்டியிட்ட ஜேம்ஸ்பாண்ட்.. தள்ளிப் போன ரிலீஸ் தேதி.. அச்சத்தில் திரையுலகம்?
லண்டன்: கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை படத்தின் ரிலீஸ் தேதியே தள்ளிப் போயுள்ளது.
டேனியல் கிரெய்க், ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசி படமான நோ டைம் டு டை வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசர் பல மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாந்து. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடுங்கிய 007
எப்பேர் பட்ட எதிரியானாலும், அடிச்சு துவம்சம் பண்ணும் 007, கொரோனாவுக்கு பயந்து பின் வாங்கி உள்ளார் என கிண்டல் மீம்கள் உலகளவில் வைரலாகி வருகின்றன. கேரி ஜோஜி புகுனகா இயக்கத்தில் உருவாகியுள்ள நோ டைம் டு டை படத்திற்கு பல சவால்கள் எழுந்த நிலையில், தற்போது கொரோனா தாக்குதல் மிகப்பெரிய சவாலாக முன் நிற்கிறது.

ஏற்கனவே
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பெய்ஜிங்கில் நடத்த திட்டமிடப்பட்ட நோ டைம் டு டை படத்தின் ப்ரீமியர் காட்சி சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா தாக்குதல் உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியே தள்ளிப் போயுள்ளது.

எப்போ ரிலீஸ்
ஹாலிவுட் அல்லாமல், இங்கிலாந்தை மையப்படுத்தி ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உருவாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புகள் இங்கிலாந்தையும் சூழ்ந்து கொண்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரலுக்கு பதிலாக நவம்பர் மாதம் தள்ளிப் போயுள்ளது. லண்டனில் நவம்பர் 12ம் தேதியும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் நவம்பர் 25ம் தேதியும் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வசூல் பாதிக்கும்
ஆயிரக் கணக்கான கோடிகள் செலவில் எடுக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டைம், திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் மாதம் வெளியானால், கொரோனா வைரஸ் பீதியால் படத்தை பார்க்க தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வராத நிலை உருவாகும் என்றும், எதிர்பார்த்த வசூல் பாதிக்கும் என்பதாலும், இப்படி ஒரு ரிலீஸ் தேதி மாற்றத்தை படக்குழு அறிவித்துள்ளது.

என்ன செய்வார்கள்
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி இப்படி அதிரடியாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மாற்றப் பட்டுள்ள நிலையில், மற்ற ஹாலிவுட் படங்கள் மற்றும் சீன படங்களின் ஏப்ரல் ரிலீஸ் படங்கள் என்ன ஆகும் என்றும், அவர்களும் இதே யுக்தியை கடைபிடிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்து வருகின்றன.