நாமினேஷனில் தப்பிய பாவனி... ஒருவர் கூட குறை சொல்லலியே
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று வீட்டின் இந்த வார தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது.
நேற்றைய கமல் வந்த எபிசோடில் லைக், டிஸ்லைக் கேமிலேயே பல போட்டியாளர்கள் இடையே மோதல், மனக்கசப்பு வந்து விட்டது. பலர் மீது இவர்கள் நடிக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும், இவர்கள் உண்மையாகயில்லை என்ற கருத்தையும் உருவாக்கி விட்டது.

இதைத் தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட தலைவர் தேர்விற்கான டாஸ்கில் வருண், அபினய், சிபி ஆகியோர் இமான் அண்ணாச்சியிடம் நடந்து கொண்ட விதம், வாக்குவாதம் செய்தது போன்றவை பலர் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று தாமரை, இந்த வார வீட்டின் தலைவராக தேர்வானார்.
தலைவர் போட்டியில் தாமரை பேசியதை ஈகோ பிரச்சனையாக்கிய சின்ன பொண்ணு, தனது பலூனை தானே உடைத்துக் கொண்டு வெளியேறினார். தலைவர் தேர்விற்கான டாஸ்கின் போது குரூப்பாக அண்ணாச்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வருண், அபினய், சிபி மூவரும், பிறகு ஒன்றாக சேர்ந்து தலைவராக தேர்வான தாமரையிடம் நல்ல விதமாக சிரித்து பேசினர்.
அதற்கு பிறகு இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரோசஸ் நடைபெற்றது. இதில் அதிகமானவர்கள் இசைவாணியை நாமினேட் செய்தார்கள். அவர் நடந்து கொள்ளும் விதம் போலியாக உள்ளது என்பது போன்று பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். பிரியங்கா, நிரூப், ராஜு உள்ளிட்ட சிலர் கடும் டஃப்பான போட்டியாளர் என்பதால் நாமினேட் செய்யப்பட்டனர்.
தலைவர் என்பதால் தாமரையை நாமினேட் செய்ய முடியாது என்பதால் அவரை யாரும் கூறவில்லை. இருந்தாலும் சிலர் தங்களின் நாமினேஷன் தேர்வு தாமரையாக இருந்தார். அவரை நாமினேட் செய்ய முடியாது என்பதால் வேறு ஒருவரை சொல்கிறேன் என்றே பிக்பாசிடம் வெளிப்படையாக கூறினர்.
ஆனால் குறைகள், கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயர்களை நாமினேட் செய்தனர். இவர்கள் ஒருவர் கூட பாவனி ரெட்டியின் பெயரை மறந்தும் சொல்லவில்லை. நாமினேஷன் ப்ரோசசில் பாவனியை தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பாவனியை யாரும் நாமினேட் செய்யாதது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. பாவனியை பாராட்டி பலரும் சோஷியல் மீடியாக்களில் கருத்து பதிவிட துவங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











