»   »  தமிழக பந்த்: காலை மற்றும் மேட்னி காட்சிகள் ரத்து!

தமிழக பந்த்: காலை மற்றும் மேட்னி காட்சிகள் ரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் அடாவடி நடவடிக்கைகள், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புக்கு தமிழ் திரையுலகம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் காலை மற்றும் பகல் காட்சி நடக்காது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Noon, Matinee shows cancelled in TN

சென்னையில் உள்ள அனைத்து அரங்குகளிலும் இந்த இரு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்குப் பிறகு அனைத்து அரங்குகளிலும் காட்சிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Theater owners announced the cancellation of morning and matinee shows all over the state to show their support to Tamil Nadu Bandh against Karnataka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil