»   »  அதிதி பாலன், மாதவனுக்கு விருது... நார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு!

அதிதி பாலன், மாதவனுக்கு விருது... நார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 9-வது நார்வே தமிழ் திரைப்பட விழா வருகிற ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த விழாவில் விருது பெறும் கடந்த ஆண்டின் சிறந்த படங்கள், கலைஞர்கள் பட்டியலை நார்வே திரைப்பட விருது கமிட்டி அறிவித்துள்ளது.

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நார்வே தமிழ் திரைப்பட விழா

நார்வே தமிழ் திரைப்பட விழா

2010-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படங்களை தேர்ந்தெடுத்து 'தமிழர் விருது' வழங்கப்படுகிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் சர்வதேச திரைப்படங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதுகள்

இந்த ஆண்டிற்கான விருதுகள்

அதன்படி, 9-வது நார்வே தமிழ் திரைப்பட விருது வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான விருதுகள் பெறும் திரைப்படங்கள், திரைக் கலைஞர்கள் பட்டியல் நார்வே திரைப்பட கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த படம்

சிறந்த படமாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'அறம்' திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த இயக்குனராக அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகை

சிறந்த நடிகராக 'விக்ரம் வேதா' படத்திற்காக மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக அருவி படத்தின் கதாநாயகி அதிதி பாலன் தேர்வாகி இருக்கிறார்.

சிறந்த பாடலாசிரியர்

சிறந்த இசை அமைப்பாளராக 'விக்ரம் வேதா' படத்தின் இசையமைப்பாளர் சி.எஸ்.சாம், சிறந்த பாடலாசிரியராக விவேக் (ஆளப்போறான் தமிழன், மெர்சல்) தேர்வு செய்ப்பட்டுள்ளார்.

சிறந்த திரைக்கதை

சிறந்த தயாரிப்பாளராக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு (அருவி) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த திரைக்கதைக்காக புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா) விருது பெறுகிறார்கள்.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகராக வேலராமமூர்த்தி (தொண்டன், வனமகன்) சிறந்த துணை நடிகையாக அஞ்சலி வரதன் (அருவி) ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள்.

சிறந்த பாடகி

சிறந்த பாடகராக அனிருத் (யாஞ்சி யாஞ்சி), சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷல் (நீதானே நீதானே) ஆகியோர் விருது பெற இருக்கிறார்கள்.

சிறந்த ஒளிப்பதிவாளர்

சிறந்த ஒளிப்பதிவாளர்

சிறந்த எடிட்டராக ரேமண்ட் டெர்ரிக் க்ரஸ்டா (அருவி), சிறந்த ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் (காற்று வெளியிடை) ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள்.

English summary
9th Norway Tamil Film Festival (NTTF) will be held from April 26 to April 29. Nayantara starrer 'Aramm' was selected as the best film. Director Gopi Nainar has been chosen as best director. Madhavan has been selected as best actor for 'Vikram Vedha'. The best actress is the heroine of the 'aruvi' film, Adithi Balan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil