twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளியூரில் இருப்பதால் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை: விக்ரம்

    By Siva
    |

    சென்னை: வெளியூரில் இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

    நேற்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    Not able to pay tribute to Karunanidhi in person: Vikram

    கருணாநிதியின் கொள்ளுப்பேரனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ள நடிகர் விக்ரம் அஞ்சலி செலுத்த வரவில்லை.

    இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

    தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

    தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடி கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Vikram has released a statement saying that he is not able to pay tribute to DMK supremo Karunanidhi as he is out of station.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X