For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  செம ட்விஸ்ட்.. பிக்பாஸில் ஏற்பட்ட பெயர் குழப்பம்.. நடிகர் சுரேஷ் இல்லையாம் இந்த சுரேஷ் தானாம்!

  |

  சென்னை: நாளை முதல் அடுத்த 100 நாட்களுக்கு ரசிகர்களை கட்டிப் போட்டு வைக்கப் போகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

  இறுதி நேரம் நெருங்கி விட்டதால், இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் குறித்த பரபரப்பான அப்டேட்கள் வரிசையாக குவிந்து வருகின்றன.

  நடிகர் சுரேஷ் இந்த சீசனில் கலந்து கொள்வார் என அறிவிப்புகள் வெளியான நிலையில், சமையல் கலைஞர் சுரேஷ் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற செம ட்விஸ்ட்டான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

  'கால் மணல்ல இருக்கணும்.. கையில சரக்கு கிளாஸ்..' அடடா.. அஜித் பட நடிகைக்கு அப்படியொரு ஆசையாம்ல!

  குவாரண்டைன்

  குவாரண்டைன்

  கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே தாமதம் ஆகி விட்டது. மேலும், நாளை துவங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 15 நாட்களாக சொகுசு ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

  பிரம்மாண்ட தொடக்க விழா

  பிரம்மாண்ட தொடக்க விழா

  நாளை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்க விழா ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ஷூட்டிங் இன்று காலை 10 மணி முதல் பிக்பாஸ் செட்டில் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆட்டம் பாட்டத்துடன் ஒவ்வொரு போட்டியாளர்கள் அறிமுகமும் நாளை விஜய் டிவியில் களை கட்டப்போகிறது.

  எப்படி இருக்கும்

  எப்படி இருக்கும்

  மற்ற பிக்பாஸ் சீசன்களை விட இந்த முறை போட்டியாளர்களின் பலம் குறைவாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எந்த புத்துக்குள் எந்த பாம்பு ஒளிந்திருக்கும் என்பதை கை விட்டுப் பார்த்தால் தான் தெரியும் என்பது போல, நிகழ்ச்சியை பார்த்தால் தான் போட்டியாளர்களின் மாஸ்க் அணியாத முகங்கள் தெரிய வரும்.

  இடுப்பழகி

  இடுப்பழகி

  நடிகைகள் கிரண், பூனம் பஜ்வா, அம்ரிதா அய்யர், லக்‌ஷ்மி மேனன், ஷில்பா மஞ்சுநாத், ஷாலு ஷம்மு மற்றும் காயத்ரி என எதிர்பார்க்கப்பட்ட எந்த பிரபலங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது உறுதியான நிலையில், இளம் நடிகையாக இடுப்பழகி ரம்யா பாண்டியன் மட்டுமே இந்த சீசனில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சர்ப்ரைஸ் இருக்குமா

  சர்ப்ரைஸ் இருக்குமா

  இன்னமும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுவரை போட்டியாளர்கள் என்று கெஸ் பண்ணாத சில சூப்பரான பிரபலங்களை கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் ஆக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து வருகின்றனர். நிச்சயம் அந்த மேஜிக் நாளைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

  சின்னத்திரை நயன்தாரா

  சின்னத்திரை நயன்தாரா

  நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் நடித்த காமெடி நடிகை அறந்தாங்கி நிஷாவை சின்னத்திரை நயன்தாரா என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஹாரத்தி, ஜாங்கிரி மதுமிதா, தாடி பாலாஜி, டேனியல், வையாபுரி, சென்றாயன் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் வரிசையில் இந்த முறை அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேரத்தில் விஜே அர்ச்சனா விலகியது ரசிகர்களை ஏமாற்றம் அடைந்த நிலையில் இவர் மட்டுமே ரசிகர்களின் ஒரே நம்பிக்கை.

  நடிகர் சுரேஷ்

  நடிகர் சுரேஷ்

  சீனியர் நடிகர்கள் லிஸ்டில் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமான நடிகர் சுரேஷ் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியானது. வெள்ளை ரோஜா, புது வசந்தம், தாலி புதுசு, அவள், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கலந்து கொள்கிறார் என்கிற தகவல் வைரலான நிலையில், அதில் செம ட்விஸ்ட்டாக ஒரு பெயர் குழப்பம் நடந்துள்ளது.

  அந்த சுரேஷ் இல்லை

  அந்த சுரேஷ் இல்லை

  லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் சீனியர் நடிகர் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளவில்லை என்றும், சமையல் கலையில் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்கிற ஹாட்டான அப்டேட் கிடைத்துள்ளது. எதுவாக இருந்தாலும் நாளை போட்டியாளர்கள் குறித்த ரியல் ரிப்போர்ட் தெரிந்து விடும்.

  English summary
  A name twist happened in BiggBoss Tamil season 4 contestant. Not actor Suresh will be the part in Bigg Boss house, instead Master Chef Suresh Chakaravarthy confirmed to Bigg Boss.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X