»   »  பட தயாரிப்பு: மச்சினி அல்ல மாமாவோட நிறுத்திக் கொண்ட தனுஷ் #NEEK

பட தயாரிப்பு: மச்சினி அல்ல மாமாவோட நிறுத்திக் கொண்ட தனுஷ் #NEEK

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தை தனுஷ் அல்ல மாறாக கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தை ராஜ் கிரணை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி அதை தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்திடம் அளித்துள்ளாராம்.

Not Dhanush but Thanu to produce Soundary's movie

அந்த படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று முதலில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சவுந்தர்யாவின் படத்தை ரஜினியின் கபாலி படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தனது படத்தில் நடிக்க ஆர்வமுள்ள புதுமுகங்கள் விண்ணப்பிக்குமாறு சவுந்தர்யா ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சவுந்தர்யாவின் படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள் neekcasting@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை அனுப்பி வைக்கவும்.

English summary
It is not Dhanush but Kalaipuli S. Thanu who is producing Soundarya Rajinikanth's movie Nilavukku Enmel Ennadi Kobam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil