கமலை ஃபாலோ பண்ணல...ஆனா, மிஞ்சிட்டாரே தனுஷ்

சென்னை : நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்ட தமிழ் ஹீரோவாக உள்ளார் தனுஷ் . அடுத்தடுத்து பல சாதனைகள் படைப்பதில் புதிய வரலாறே படைத்து வருகிறார் தனுஷ்.

தனுஷ் நடித்த ஒய் திஸ் கொலவெறி டி, ரவுடி பேபி போன்ற பாடல்கள் இந்திய சினிமா இசை வரலாற்றிலேயே மிகப் பெரிய புகழ்பெற்ற மற்றும் அதிகமானவர்களை கவர்ந்த பாடல்களாக உள்ளன. அதிலும் ரவுடி பேபி பாடல் யூட்யூப்பில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

ஹாலிவுட் படத்தில் முதல் தமிழ் நடிகர்

ஹாலிவுட் படத்தில் முதல் தமிழ் நடிகர்

இதே போல் முழு நீள ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையையும் தனுஷ் பெற்றுள்ளார். தி ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் படத்தில் கேங்க் லீடராக தனுஷ் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து டிஜிட்டல் தளத்திலும் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் தனுஷ்.

கமல், ரஜினியை மிஞ்சிய தனுஷ்

கமல், ரஜினியை மிஞ்சிய தனுஷ்

ட்விட்டரில் 10 மில்லியன் (ஒரு கோடி) ஃபாலோவர்களை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார் தனுஷ். இதன் மூலம் உலக நாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோரை முந்தி, முதலிடத்திற்கு வந்துள்ளார் தனுஷ்.

விஜய்க்கு நான்காவது இடம்

விஜய்க்கு நான்காவது இடம்

ட்விட்டரில் அதிக ஃபாலோவர்களை பெற்ற தமிழ் நடிகர்கள் பட்டியலில் 68 லட்சம் ஃபாலோவர்களுடன் கமல் மற்றும் சூர்யா இரண்டாவது இடத்தில் உள்ளனர். ரஜினியை 59 லட்சம் பேரும், விஜய்யை 32 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

கமலை ஃபாலோ பண்ணாத தனுஷ்

கமலை ஃபாலோ பண்ணாத தனுஷ்

ட்விட்டரில் தனுஷை ஒரு கோடி பேர் ஃபாலோ செய்கிறார்கள். ஆனால் அவர் 156 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார். இந்த பட்டியலில் ரஜினி, விஜய், அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள், தன்னுடன் நடித்த ஹீரோயின்கள், சில டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், இசை அமைப்பாளர்கள், ஹாலிவுட் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர் என புகழப்படும் கமல் இல்லவே இல்லை. இது பலரையும் அதிர்ச்சியடையவும், ஆச்சரியப்படவும் வைத்துள்ளது.

படப்பிடிப்பில் பிஸியான தனுஷ்

படப்பிடிப்பில் பிஸியான தனுஷ்

தனுஷ் தற்போது ஐதராபாத்தில் டி 43 படத்தில் படப்பில் இருந்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் டி44 மற்றும் செல்வராகவன் இயக்கும் ராயன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நானே வருவேன் படத்திலும் ஒரே சமயத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

அனைத்து மொழிகளிலும் தடம்

அனைத்து மொழிகளிலும் தடம்

அத்துடன் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே என்ற இந்தி படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தெலுங்கில் சேகர் காமுல்லா மற்றும் வெங்கட் அட்லுரி ஆகியோர் இயக்கும் 2 தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X