பாபநாசம் 2 இப்போ இல்லை... ஸ்ரீபிரியா வெளியிட்ட அதிரடி தகவல்
சென்னை : மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. பிறகு இந்த படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படங்களும் செம ஹிட் ஆகின. இதைத் தொடர்ந்து த்ரிஷ்யம் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டு, இந்த ஆண்டு ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது.
த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதில் கமலுக்கு ஜோடியாக கெளதமியும், மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் நடித்தனர். இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. த்ரிஷ்யம் 2 மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டதை போல் தமிழிலிலும் பாபநாசம் 2 எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

கெளதமிக்கு நோ சொன்ன கமல்
ஆனால் பாபநாசம் படத்திற்கு பிறகு கமல் - கெளதமி பிரிந்து விட்டதால், பாபநாசம் 2 படத்தில் கெளதமி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. கெளதமியை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும். அவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என டைரக்டர் ஜீத்து ஜோசப் நினைத்தார். ஆனால் கெளதமி நடிப்பதற்கு கமல், நோ சொல்லி விட்டாராம்.

மீண்டும் மீனாவா
கெளதமிக்கு பதில் மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 ல் நடித்த மீனாவையே நடிக்க வைக்கலாம் என கமல் கூறினாராம். ஆனால் தயாரிப்பாளரும், கமலின் நண்பருமான ஸ்ரீபிரியா, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் த்ரிஷ்யம் படத்தில் மீனாவே நடித்துள்ளதால் தமிழிலும் அவரையே நடிக்க வைத்தால் அது படத்தின் வசூலை பாதிக்கும். ரசிகர்கள் சலிப்படைவார்கள் என கூறி விட்டாராம்.

நதியாவுடன் பேச்சு
இதனால் கெளதமி, மீனா இல்லாமல் புதிதாக யாரையாவது நடிக்க வைத்தால் அது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் என நினைத்து நதியாவிடம் பேசப்பட்டதாம். 80 களில் முன்னணி நடிகையாக இருந்த நதியா, முன்னணி ஹீரோக்கள் பலருக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் இதுவரை கமலுடன் நடித்ததே இல்லை. இதனால் நதியாவை, பாபநாசம் 2 வில் நடிக்க வைக்க நினைத்தார்களாம்.

வரிசையாக படங்கள்
இந்தியன் 2 வழக்கு நடந்து கொண்டிருந்ததால் பாபநாசம் 2 படத்தில் தான் அடுத்து கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க போய் விட்டார் கமல். இதை முடித்து விட்டு இந்தியன் 2 ல் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க போகிறாராம். தேவர்மகன் 2 படத்தின் வேலைகளிலும் கமல் கவனம் செலுத்தி வருகிறார்.
#கமல்ஹாசன் சார்க்கு பாபநாசம் 2 பண்ண நேரம் இல்லை அல்ரெடி உள்ளாட்சி தேர்தல், பிக்பாஸ்5, விக்ரம் முடிச்சிட்டு "வெற்றிமாறன்" கூட படம் பண்றாரு🔥 #KamalHaasan#Vikram pic.twitter.com/yY44oQ6Qir
— SundaR KamaL (Kamaladdict7) September 29, 2021
ஹீரோயின் பிரச்சனையே இல்லை
இதனால் பாபநாசம் 2 படம் எப்போது என தயாரிப்பாளராக ஸ்ரீபிரியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாபநாசம் 2 எடுக்கிறோம் என்றால் கண்டிப்பாக அதில் கமல் சார் தான் நடிப்பார். தமிழில் ஹீரோயின் ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் கமல் சார் ரொம்ப பிஸி. ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கமலுக்கு நேரமில்லை
அதோடு உள்ளாட்சி தேர்தல், பிக்பாஸ் சீசன் 5 வேற துவங்க போகிறது. விக்ரம் படத்தை முடித்து விட்டு வெற்றிமாறன் உடன் ஒரு படத்தில் பணியாற்ற போகிறார். அதனால் பாபநாசம் 2 படம் பண்ண அவருக்கு நேரம் இல்லை என தெரிவித்துள்ளார் ஸ்ரீபிரியா. இதன் மூலம் பாபநாசம் 2 தற்போது எடுக்கப்படாது. தற்போது கமிட்டாகி இருக்கும் வேலைகளை கமல் முடித்த பிறகே, பாபநாசம் 2 வேலைகளை துவக்குவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











