For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கடிக்க மட்டும் இல்லை.. முத்தமும் கொடுத்த கோலார்..கமல் கண்டிப்பாரா?

  |

  பிக்பாஸ் வீட்டில் கோலார் செய்யும் கோளாறுகள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

  தினம் தினம் விதவிதமான பெண் போட்டியாளர்களுடன் தடவிக்கொண்டு வம்பிழுத்துக்கொண்டிருந்த கோலார் அதையே தொடர்ந்து செய்கிறார்.

  பெண்களை கேவலமாக நடத்துவது சான்ஸ் கிடைத்தால் உரசுவது என தினமும் நெட்டிசன்களிடம் திட்டும் வாங்கும் அசல் கோலார் இன்று ஒருபடி மேலே போய் நிவாஷினிக்கு முத்தம் கொடுத்தார்.

  சிங்கப்பூர் பாப்பாவை எப்படி கடிக்கிறாரு பாருங்க அசல் கோலார்.. என்ன பசிக்குதான்னு கேள்வி வேற! சிங்கப்பூர் பாப்பாவை எப்படி கடிக்கிறாரு பாருங்க அசல் கோலார்.. என்ன பசிக்குதான்னு கேள்வி வேற!

   பராசக்தி வசனம் போல் பல விசித்திரமான போட்டியாளர்களை சந்தித்துள்ளது

  பராசக்தி வசனம் போல் பல விசித்திரமான போட்டியாளர்களை சந்தித்துள்ளது

  பராசக்தி படத்தில் வரும் வசனம் போல் பிக்பாஸ் வீடு பல விசித்திரமான போட்டியாளர்களை சந்தித்துள்ளது. பலர் பலவித மனநிலையில் இருப்பார்கள். ஆரவ்-ஓவியா காதல், ஷாரிக்-ஐஸ்வர்யா, கவின்-லாஸ்லியா, பாவனி, மகத் யாஷிகா, பாலாஜி-ஷிவானி, தர்ஷன் - ஷெரின் போன்ற பிக்பாஸ் காதல் ஜோடிகள் குலாவி திரிந்ததும், சீசன் காதல் போல் பிக்பாஸ் முடிந்ததும் ஒன்றுமில்லாமல் போனதையும் பார்த்தோம். அதேபோல் பிக்பாஸ் சீசன் 6 லும் ஒரு காதல் மலர்கிறதா? அல்லது சிங்கப்பூர் விசாவுக்காக கோலார் முயற்சிக்கிறாரா? காலம்தான் பதில் சொல்லும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

   ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் கோலாருக்கு ஒரே நோக்கம்

  ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் கோலாருக்கு ஒரே நோக்கம்

  பிக்பாஸ் வீட்டில் அவரவர் ஒரு நோக்கத்தில் வர நீ எதற்காக வந்திருக்கிறாய், தொட ஆரம்பித்து, தடவ ஆரம்பித்து வருட ஆரம்பித்து, பலரையும் ட்ரை செய்து குயின்சியிடம் திட்டு வாங்கி, ஜனனியின் முறைப்பை சந்தித்து கடைசியில் நிவாஷினியிடம் செட்டில் ஆகியுள்ளார் கோலார், அங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாக அத்துமீறி மணக்கணக்கில் கதைக்க கடந்த வாரம் கமல் அழைத்து கேட்டபோது போர்வெல் பம்பு தண்ணீர்போல் கடகடவென்று கண்ணில் கண்ணீர் வந்தது நிவாஷினிக்கு. மறுநாள் நான் தவறு செய்தேனான்னு கேட்டுகிட்டு இருந்தார். அதற்கு மறுநாள் எதுவும் நடக்காதது போல் கோலாருடன் மீண்டும் கடலை போட ஆரம்பித்துவிட்டார்.

   கடலைப்போடு கட்டிப்பிடி வைத்தியமாக மாறியதே கோலார்

  கடலைப்போடு கட்டிப்பிடி வைத்தியமாக மாறியதே கோலார்

  கடலைப்போடுவது ஒரு கட்டத்தில் முற்றிப்போய் கட்டிப்பிடித்து நின்றனர் இருவரும் (இதுவரை பிக்பாஸில் இப்படிப்பட்ட காட்சி இருந்ததில்லை. மகத்-யாஷிகா ஒரு போர்வைக்குள் படுத்தப்படி கிடந்தது பிரச்சினையாக இது ஒன்றும் மும்பை இந்தி பிக்பாஸ் அல்லன்னு கமல் கண்டித்து அதன் பின் கண்ணியம் காக்கப்பட்டது. அதன் பின் தற்போது இந்த கட்டிப்பிடி வைத்தியம் நடந்துள்ளது. பின்னர் உரசல், முட்டல் மோதல் என்றாகி ஊடலில் முடிந்தது இன்று. அந்த ஊடலை சரி செய்து விட்டார் குயின்சி. அந்த நேரத்தில் நைசாக நிவாஷினி பக்கம் வந்த கோலார் அவர் கன்னத்தில் முத்தம் கொடுப்பதுபோல் காதோரம் முத்தம் பதித்தார்.

   முத்தத்தில் தான் எத்தனை வகை..சீசன் 6-ல் மருத்துவ முத்தம் வருமா?

  முத்தத்தில் தான் எத்தனை வகை..சீசன் 6-ல் மருத்துவ முத்தம் வருமா?

  பிக்பாஸ் மருத்துவ முத்தத்தை பார்த்துள்ளது. அன்பான நெற்றியில் இடும் முத்தங்களை பார்த்துள்ளது. இன்று மீண்டும் புதுவகையான ஒரு முத்தத்தை பார்க்க முடிந்தது. அதன் பின்னர் இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் தழுவியபடி கார்டன் ஏரியாவில் ஒரே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் உரசல் ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் பழகிவிட்டதால் யாரும் கண்டுக்கொள்வதில்லை. ஒரு கட்டத்தில் தலைமுடிக்குள் கைவிட்டு கோதிவிட்டுக்கொண்டிருந்தார் அசல் கோலார். இவைகளை வைத்துதான் நெட்டிசன்கள் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது லேசாக முத்தத்துக்கு வந்துள்ளார் கோலார், இது மருத்துவமுத்தமாக மாறுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கிண்டலடித்து வருகின்றனர்.

  English summary
  Kolar's problems in the Bigg Boss house are increasing day by day. Kolar, who has been jolly with various female contestants day after day, continues to do the same. Original Kolar, who scolds netizens every day for treating women badly and rubs him if he gets a chance, today went one step further and kissed Nivashini.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X