twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் படத்தில் சூர்யா மட்டுமில்லங்க.. கார்த்தியும் "வந்திருக்கார்.." எத்தனை பேர் கவனிச்சீங்க?

    |

    சென்னை : டைக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தின் வசூல், படத்தில் நடித்தவர்களின் நடிப்பு பற்றி பல தகவல்கள் தினமும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இது கமல் ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையே கொண்டாட வைத்துள்ளது.

    ஜுன் 3 ம் தேதி ரிலீசான விக்ரம் படம் கடந்த 23 நாட்களில் இதுவரை 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து விட்டது. வசூல் குறைந்து விட்டதாக பரவின தகவல்களை பொய்யென அடித்து நொறுக்கி, 404 கோடிகளை உலகம் முழுவதிலும் வசூல் செய்துள்ளது.

    நான்கு வருடங்களுக்கு பிறகு நடித்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்று, வசூல் மழை பொலிந்து வருவதால் கமல் செம ஹாப்பி உள்ளார். விக்ரம் வெற்றி தந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

    ரூ.30 இருந்தா போதும்..வயிறார சாப்பிடலாம்.. ஏழைகளின் பசியை போக்கிய சூரி.. வாழ்த்தும் மக்கள் !ரூ.30 இருந்தா போதும்..வயிறார சாப்பிடலாம்.. ஏழைகளின் பசியை போக்கிய சூரி.. வாழ்த்தும் மக்கள் !

    இதுவும் முதல் முறை தான்

    இதுவும் முதல் முறை தான்

    கமலின் 60 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 4 ஆண்டுகளாக முதல் முறை பிரேக் விழுந்ததை போல், இதுவரை எப்போதும் இல்லாமல் ஒரே நேரத்தில் கமல் பல படங்களை கைவசம் வைத்து பணியாற்றி வருகிறார். இதுவரை முடிவு செய்யப்பட்டது, ஏறக்குறைய பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது என சுமார் 10 படங்களை கமல் கையில் வைத்துள்ளார். இதில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2, தேவர்மகன் 2, விக்ரம் 3 ஆகிய படங்களும் அடங்கும்.

    வெற்றியை கொண்டாடிய கமல்

    வெற்றியை கொண்டாடிய கமல்

    விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக லோகேஷ் கனகராஜிற்கு கார், அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச், விக்ரம் டீமுக்கு பிரியாணி விருந்து என தடபுடல் செய்து விட்டார் கமல். விக்ரம் படத்தை பொருத்த வரை மெயின் வில்லன் விஜய் சேதுபதி, முக்கிய கேரக்டர் ஃபகத் ஃபாசிலாக இருந்தாலும் க்ளைமாக்சில் வெறும் 3 நிமிட சீனில் நடத்த சூர்யா தான் பெரிய அளவில் பேசபட்டார்.

    சூர்யாவை எதிர்பார்த்த ரசிகர்கள்

    சூர்யாவை எதிர்பார்த்த ரசிகர்கள்

    படத்தின் ரிலீசிற்கு முன்பிருந்தே விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் படத்திற்கு மிகப் பெரிய ப்ரொமோஷனாக அமைந்தது. இதனால் விக்ரம் படத்தில் கமல், சூர்யாவின் கேரக்டர்கள், யார் அந்த விக்ரம், யார் அந்த கோஸ்ட் போன்ற விபரங்கள் இணையத்தில் அதிகம் தேடப்பட்டன. சூர்யா எப்போ வருவார், என்ன ரோல் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே விக்ரம் படம் பார்த்தவர்கள் அதிகம். சூர்யா ஃபேன்ஸ் இதை தங்கள் ஸ்டார் படமாகவே கொண்டாடினர்.

    ரோலக்ஸ் சார்...செம

    ரோலக்ஸ் சார்...செம

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் வீணடிக்காமல் ரோலக்ஸ் ரோலில், க்ளைமாக்சில் மாஸ் என்ட்ரி கொடுத்தார் சூர்யா. அவர் பேசும் ரோலக்ஸ் சார் டயலாக் செம டிரெண்டானது. தற்போது வரை சோஷியல் மீடியாவில் அதிகமானவர்கள் சூர்யா பற்றிய தகவல்களை பகிரும் போதும் ரோலக்ஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். அதிலும் விக்ரம் 3 படத்தில் சூர்யா கமிட்டாகி இருப்பது ரசிகர்களின் உற்சாகத்தை பலமடங்காக்கி உள்ளது.

    விக்ரம் படத்தில் கார்த்தி நடித்துள்ளாரா

    விக்ரம் படத்தில் கார்த்தி நடித்துள்ளாரா

    படத்தில் க்ளைமாக்சில் 3 நிமிடங்கள் நடத்த சூர்யா, இரண்டு சீன்களில் ஏஜன்ட் டீனா ரோலில் நடித்த டான்சர் வசந்தி என அனைவரையும் ரசிகர்கள் தேடி தேடி கொண்டாடி வருகின்றனர். பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். ஆனால் படத்தில் கார்த்தியும் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்ட அந்த முக்கியமான கைதி 2 படத்திற்கான ஆரம்பமாக கார்த்தி தான் இருக்க போகிறார், கைதி 2 படத்தில் கார்த்தி - சூர்யா மோதலை விக்ரம் படத்திலேயே கார்த்தி கன்ஃபார்ம் செய்துள்ளார். இந்த விஷயங்களை பற்றி இதுவரை யாரும் பேசவே இல்லை.

    எந்த சீனில் நடித்துள்ளார்

    எந்த சீனில் நடித்துள்ளார்

    விக்ரம் படத்தில் கார்த்தி நடித்த சீனை கவனிக்கவில்லை என்றால், விக்ரம் படத்தை நீங்கள் சரியாக பார்க்கவில்லை என்று தான் அர்த்தம். சூர்யா வரும் அதே க்ளைமாக்ஸ் சீனில் தான் கார்த்தியும் நடித்துள்ளார். சூர்யாவிடம் பேசும் ஹரிஷ் உத்தமன் மற்றும் அர்ஜுன் தாஸ், திருச்சியில் நடந்த சம்பவத்திற்கு காரணம் ஜெயிலில் இருந்து வந்த கைதி தான். அவன் பெயர் டில்லி என கூறுவார்கள். இந்த சீனில் தான் கார்த்தி நடித்துள்ளார்.

    அட...இத கவனிக்கலியே

    அட...இத கவனிக்கலியே

    டில்லியின் பெயரை சொன்னதும் அடுத்த ஷாட்டில், கைதி படத்தில் கார்த்தியின் மகளாக வரும் சிறுமி மற்றும் லாரி க்ளீனராக வருபவரிடம் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்பார். அந்த சமயத்தில் குடிசைக்குள் இருந்து, "பெற்ற தாய் தனை தாய் மறந்தாலும்.." என்ற திருவருட்பா பாடல் ஒலி கேட்கும். இது கார்த்தி வாய்ஸ்தான். ஆனால் அவர் காட்சியில் தோன்றியிருக்க மாட்டார். ஆனால் இந்த குரலுக்கே தியேட்டரில் ரசிகர்களின் விசில் வீராவேசமாக பறந்தது. இந்த சீனில் இருந்து தான் கைதி 2 ஆரம்ப போகிறது. சூர்யா - கார்த்தியின் மோதலும் ஆரம்பிக்க போகிறது என்று தெரிகிறது

    English summary
    Not only Suriya, his brother Karthi also play cameo role in Vikram. In climax scene, Harish Utthaman and Arjun das told Suriya about Dilli. On this scene, Karthi gave a voice appearence. In this was the starting point of Kaithi 2 story and confirmed Suriya and Karthi starred in Kaithi 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X