»   »  திரிஷாவைத் தொடர்ந்து டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய பீட்டா இந்தியா சிஇஓ பூர்வா

திரிஷாவைத் தொடர்ந்து டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய பீட்டா இந்தியா சிஇஓ பூர்வா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் விமர்சித்ததை அடுத்து த்ரிஷா மட்டும் அல்ல பீட்டா இந்தியா அமைப்பின் சிஇஓ பூர்வா ஜோஷிபுராவும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பின் ஆதரவாளரான நடிகை த்ரிஷா கடும் விமர்சனத்திற்குள்ளானார். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் கூட அடித்துவிட்டனர்.

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லை என்ற அவரின் விளக்கத்தையும் யாரும் ஏற்கவில்லை.

ட்விட்டர்

ட்விட்டர்

தன்னை பலரும் கடுமையாக விமர்சித்ததை அடுத்து த்ரிஷா ட்விட்டரில் இருந்து வெளியேறினார். ஒரு பெண்ணை அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா என்று காட்டமாக கேட்டார்.

பீட்டா இந்தியா சிஇஓ

பீட்டா இந்தியா சிஇஓ

ஜல்லிக்கட்டு கொடூரமானது, சட்டவிரோதமானது. காளைகளை அடக்குவதில் ஆண்மை இல்லை. பெண்களை அவமதித்து ஜல்லிக்கட்டை சட்டப்படி செல்லும்படியாக செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள் என பீட்டா இந்தியா சிஇஓ பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார்.

ட்விட்டர், ஃபேஸ்புக்

ட்விட்டர், ஃபேஸ்புக்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பூர்வாவை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டனர் . இதை பார்த்த பூர்வா கடுப்பாகி ட்விட்டர், ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறினார்.

விஷால்

விஷால்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் இருப்பதாக பரவிய தகவலை அடுத்து அவரும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவரும் ட்விட்டரை விட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Not only Trisha and Vishal, PETA India CEO Poorva Josipura too quits social media over Jallikattu issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil