»   »  நான் குடிகாரியா?, எம்.எல்.ஏ. கமெண்ட் வொர்த்தே இல்லை: நடிகை ஹேமமாலினி

நான் குடிகாரியா?, எம்.எல்.ஏ. கமெண்ட் வொர்த்தே இல்லை: நடிகை ஹேமமாலினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குடி பழக்கம் பற்றி பேசிய எம்.எல்.ஏ. குறித்து கருத்து தெரிவித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லையாம் நடிகை ஹேமமாலினி.

மகாராஷ்டிரா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.வான பச்சு காது நாந்ததில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். விவசாயிகளின் தற்கொலை பற்றி பேசிய அவர் பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினியை வம்புக்கு இழுத்திருந்தார்.

ஹேமாவின் குடிப்பழக்கம் பற்றி கூட்டத்தில் பேசினார்.

தற்கொலை

தற்கொலை

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள மதுப்பழக்கம் காரணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நடிகை ஹேமமாலினி தினமும் மது அருந்துகிறார், அவர் என்ன தற்கொலையா செய்து கொண்டார்? என்றார் எம்.எல்.ஏ.

ஹேமமாலினி

ஹேமமாலினி

எம்.எல்.ஏ. பச்சு காது இப்படி பேசியிருக்கிறாரே என்று ஹேமமாலினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஹேமா கூறுகையில், யாரோ ஒருத்தர் பேசியது பற்றி கருத்து தெரிவித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அது வொர்த்தே இல்லை என்றார்.

அமைதி

அமைதி

வொர்த்தே இல்லாத விஷயம் பற்றி பேச வேண்டுமா என்று தான் அமைதியாக இருக்கிறேன். அவருக்கு பப்ளிசிட்டி தேவைப்படுவதால் குறுக்குவழியை தேர்வு செய்துள்ளார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றார் ஹேமமாலினி.

ஜெயா பச்சன்

ஜெயா பச்சன்

அரசியல் தலைவர்கள் நடிகைகளை வம்புக்கு இழுப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக 2012ம் ஆண்டு நாடாளுமன்ற அவையில் பேச எழுந்த எம்.பி.யும், நடிகையுமான ஜெயா பச்சனை பார்த்து அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில் குமாபர் ஷிண்டே, சகோதரியே, முக்கியமான விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் இது சினிமா இல்லை என்றார். இதை கேட்ட ஜெயா பச்சன் அதிர்ச்சியில் அவர் இடத்தில் பேசாமல் அமர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress cum BJP MP Hemamalini said that she doesn't want to comment about independent MLA Bacchu Kadu's speech about her drinking issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil