»   »  த்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் இடையே வேற '3' எழுத்து விஷயம் தான் உள்ளதாம்!

த்ரிஷாவுக்கும், ராணாவுக்கும் இடையே வேற '3' எழுத்து விஷயம் தான் உள்ளதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லையாம், மாறாக நட்பு என்ற மூன்று எழுத்து விஷயம் தான் உள்ளதாம். இதை த்ரிஷாவே தெரிவித்துள்ளார்.

த்ரிஷா, ராணா காதல் பற்றிய விபரங்களை மறுபடியும் சொல்ல வேண்டுமா? தேவை இல்லை என்று நினைக்கிறோம். எங்களை விட உங்களுக்கே அவர்களின் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பிரேக்கப் பற்றி எல்லாம் நன்கு தெரியும்.

அதனால் விஷயத்திற்கு வருவோம். மறுபடியும் ராணாவுடன் த்ரிஷாவுக்கு காதல் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இது குறித்து த்ரிஷாவும் விளக்கம் அளித்துள்ளார்.

சிங்கிள்

சிங்கிள்

நான் சிங்கிளாகத் தான் உள்ளேன். பிற சக நடிகர்களை போன்றே ராணாவும் எனக்கு நல்ல நண்பர். மற்றபடி அவர் மீது எனக்கு தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை என்கிறார் த்ரிஷா.

ராணா

ராணா

ட்விட்டரில் நான் ராணாவுடன் பேசினால் உடனே அது செய்தியாகிவிடுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் பல ஹீரோக்களுடன் பேசி வருகிறேன் என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

நான் படங்களில் பிசியாக உள்ளேன். திருமணத்திற்கு தற்போது அவசரம் இல்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கு என்று த்ரிஷா கூறியுள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டரில் த்ரிஷாவும், ராணாவும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் ஒருவரையொருவர் ஃபாலோ செய்வதை நிறுத்தியுள்ளனர். இதை ரசிகர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

English summary
Trisha said that actor Rana is her good friend and there is nothing special between them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil