»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஆர்.பி.எஃப். நிறுவனத்தில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி நடிகர் சரத்குமார், பாக்யராஜ், ராம்கி,பாண்டியராஜன் உள்பட 18 நடிகர்களுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை பெனிபிட் பன்ட் நிதிநிறுவனம் தனது முதலீட்டாளர்களை மோசடி செய்ததையடுத்துமத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்பெனி லா போர்டு, இந்நிறுவனத்தை எடுத்துக் கொண்டு புதியஇயக்குநர்களை நியமித்தது.

இதற்கிடையில் ஆர்பிஎஃப் முதலீட்டாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளனர். அந்த மனுவில் கடன் வாங்கிய பெரும் பணக்காரர்கள் கடனைத் திருப்பி தர மறுக்கின்றனர்.அவர்களிடமிருந்து விரைவாகக் கடனை வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி தினகரன் நிதிநிறுவனத்தில் கடன்வாங்கியவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவையடுத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் ஆர்.பி.எஃப்.நிறுவனத்தில் கடன் வாங்கிக் கொண்டு திருப்பிச் செலுத்தாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசன், பாக்யராஜ்,பாண்டியராஜன், ராம்கி உள்பட 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நோட்டீசைப் பெற்ற நடிகர்கள் வியாழக்கிழமை தாங்கள் கடனை உடனே அடைத்து விடுவதாக பொருளாதாரகுற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர்.

Read more about: actor, chennai, loan, notice, tamil nadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil