»   »  தீபாவளி ரேஸ்: கமலுடன் நேரடியாக மோதும் அஜீத்?

தீபாவளி ரேஸ்: கமலுடன் நேரடியாக மோதும் அஜீத்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலின் தூங்காவனம் திரைப்படத்துடன் அஜீத்தின் தல 56 திரைப்படமும் மோதவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தீபாவளி தினத்தில் கமலின் தூங்காவனம், அஜீத்தின் தல 56, தனுஷின் வேலை இல்லாப் பட்டதாரி 2 ஆகிய படங்கள் மோதவிருக்கின்றன. இதில் தீபாவளிக்கு 4 தினங்கள் முன்பாகவே கமலின் தூங்காவனம் திரைப்படம் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் தற்போது தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகும் கமல் திரைபடத்துடன் அஜீத்தின் தல 56, திரைப்படமும் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


தீபாவளி ரேஸ்

தீபாவளி ரேஸ்

இந்த வருடத் தீபாவளி தினத்தில் கமலின் தூங்காவனம், அஜீத்தின் தல 56, தனுஷின் வேலை இல்லாப் பட்டதாரி 2 ஆகிய திரைப் படங்கள் நேரடியாக மோதவிருக்கின்றன. இந்த ரேஸில் தனது தூங்காவனம் திரைப்படத்தின் மூலம் 4 நாட்களுக்கு முன்பாகவே களத்தில் குதிக்கிறார் கமல்.


கமல் vs அஜீத்

கமல் vs அஜீத்

இந்தப் பந்தயத்தில் தற்போது நடிகர் அஜித்தும் தனது தல 56 படத்தின் மூலம் கலந்து கொள்ளுகிறார்.மேலும் நடிகர் கமலின் தூங்காவனம் திரைப்படத்துடன் தல 56 திரைப்படமும் முன்பாகவே வெளியாகிறது.
தல 56

தல 56

அஜீத்தின் தல 56 திரைப்படம் நவம்பர் 6 ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அஜீத் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இருவருமே சாய் பாபாவின் தீவிர பக்தர்கள் என்பதால் வியாழக்கிழமை அன்று படத்தை வெளியிட விருப்பம் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். 5 தினங்கல் முன்பாகவே வெளியாவதால் வசூலும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால் தீபாவளி தினத்திற்கு முன்பாகவே படத்தை வெளியிடவிருக்கின்றனர்.


தனியாக வரும் தனுஷ்

தனியாக வரும் தனுஷ்

பெரிய நடிகர்கள் இருவரும் முன்பாகவே தங்கள் படங்களை வெளியிடுவதால் தீபாவளி பந்தயத்தில் தனியாக கலந்து கொள்கிறார் தனுஷ். தனுஷின் வேலை இல்லாப் பட்டதாரி 2 திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவிருக்கிறது.
கடைசி நேரத்தில்

கடைசி நேரத்தில்

இந்த கமலின் தூங்காவனம், அஜீத்தின் தல 56, தனுஷின் வேலை இல்லாப் பட்டதாரி 2 இந்த 3 படங்களுடன் மேலும் சில படங்களும் கடைசி நேரத்தில் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தப்போவது யார்? என்று பார்க்கலாம்.English summary
Kamal Haasan's Thoongaa Vanam is planning to use the Friday weekend so that they will be getting a huge five day opening . Now, hot buzz is that one more Diwali release, Thala 56 will also be releasing before the festival day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil