»   »  'இப்போ நான் பரோட்டா சூரி இல்லை... புஷ்பா புருஷன்... ஆனா என் மனைவி...?!'

'இப்போ நான் பரோட்டா சூரி இல்லை... புஷ்பா புருஷன்... ஆனா என் மனைவி...?!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

இது வரை பரோட்டா சூரியாக இருந்த நான் புஷ்பா புருஷனாக அடையாளம் காணப்படுகிறேன் என்றார் நகைச்சுவை நடிகர் சூரி.

Now my identity is pushpa Purushan - Soori

சரவணன் இருக்க பயமேன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சூரி பேசுகையில், "இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். ஆனால் என் மனைவிதான் அந்த அடையாளத்தால் ரொம்ப வருத்தப்படுகிறார்.

Now my identity is pushpa Purushan - Soori

ஷூட்டிங்கில் நடிக்கும் நாங்கள் எவ்வளவு எக்ஸ்ட்ராவா பேசினாலும் அதை அனுமதிப்பார் இயக்குநர் எழில். அவருக்குத் தெரியும் எதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று. உதயநிதி சின்சியரான நடிகர், நல்ல மனசுக்காரர். என் அப்பா இறந்தபோது பிரஸ்மீட்டை கூட கேன்சல் செய்து விட்டு எனக்காக மதுரை வரை வந்து என் அப்பாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அந்த அளவு நட்புக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர். ரெஜினா பாடல் ஒன்ஸ் மோர் கேட்கும் வகையில் வந்திருக்கிறது. அதுவே 50 நாட்கள் வரை ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வரும்," என்றார் நடிகர் சூரி.

English summary
Comedian Soori says that Director Ezhil has gave a new identity to him as Pushpa Purushan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil