Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அதிக மின் கட்டணம்.. பிரசன்னா.. கார்த்திகா நாயரை தொடர்ந்து.. இந்த பிரபல நடிகையும் புலம்பல்!
மும்பை: நடிகர் பிரசன்னா, நடிகை கார்த்திகா நாயர் உள்ளிட்ட பிரபலங்கள், தங்கள் வீட்டிற்கு எக்கச்சக்கமாக மின்சார கட்டணம் போடப்பட்டுள்ளதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தனர்.
Recommended Video
இந்நிலையில், இன்னொரு பிரபல நடிகையான ஷ்ரத்தா தாஸுக்கும் மின்சார கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும், இந்த லாக்டவுனில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ
முறைப்படி
பீட்டர்
பாலை
கரம்பிடித்தார்
வனிதா..
லிப்லாக்குடன்
களைக்கட்டிய
திருமணம்!

எகிறும் பில்
லாக்டவுன் காரணமாக மின் வாரிய ஊழியர்கள் கடந்த இரு மாதங்களாக வீட்டிற்கு வந்து கணக்கெடுக்கும் பணிகளை செய்யவில்லை. இந்நிலையில், மின் கட்டணத்தை செலுத்த போகிறவர்களுக்கு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பில் கட்டணம் உச்சத்தில் இருப்பதால், மன வேதனைக்கு ஆளான அவர்கள், அதுகுறித்து புகார் தெரிவித்தும், சமூக வலைதளத்தில் கொந்தளித்தும் வருகின்றனர்.

பிரசன்னா குற்றச்சாட்டு
தன்னைப் போல யாரெல்லாம் மின்சார கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக உணர்கிறீர்கள் என்ற ட்வீட்டை போட்டு மின்சார கட்டணம் உயர்ந்து வருவதை முதன்முதலாக அம்பலப்படுத்தினார் நடிகர் பிரசன்னா. ஆனால், உடனடியாக அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

ஒரு லட்சம் ரூபாய் பில்
எல்லாவற்றுக்கு உட்சபட்சமாக கோ படத்தில் நடித்த நடிகை கார்த்திகா நாயரின் வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்தது தான் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது. இது என்ன மாதிரியான ஊழல் என்றும், ஜூன் மாத கரன்ட் பில் ஒரு லட்சத்தை நெருங்கி விட்டதாகவும், இதே போன்ற பிரச்சனையை பல மும்பை வாசிகள் அனுபவித்து வருவதாகவும் விளாசி இருந்தார்.

இன்னொரு நடிகைக்கும்
இந்நிலையில், குண்டூர் டாக்கீஸ், சித், கிரேட் கிராண்ட் மஸ்தி, ஆர்யா 2 என பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரத்தா தாஸும் தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு மூன்று மடங்கு அதிகமாக கரன்ட் பில் வந்திருக்கிறது என்ற புகாரை முன் வைத்துள்ளார்.

அதானி நிறுவனம்
மும்பையில் அதானி நிறுவனம் மற்றும் டாட்டா நிறுவனம் ஆகிய தனியார் நிறுவனங்கள் தான் மின் துறையை நடத்தி வருகின்றன. அதானி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இருக்கும் கார்த்திகா நாயர் மற்றும் ஷ்ரத்தா தாஸ் தற்போது இந்த புகாரை எழுப்பியுள்ளனர். மேலும், கஸ்டமர் கேரும் தங்களுக்கு உரிய பதிலை தர மறுக்கிறது என்றும் ஷ்ரத்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வளவு பில்
நடிகை ஷ்ரத்தா தாஸுக்கு வழக்கமாக 8 ஆயிரத்திற்கும் குறைவாகவே கரன்ட் பில் வரும் என்றும், தற்போது 26 ஆயிரம் ரூபாய் கரன்ட் பில் வந்திருப்பதாகவும் புலம்பியுள்ளார். லாக்டவுன் என்பதால், தான் இஷ்டத்துக்கு மின்சாரத்தை செலவு செய்யவில்லை என்றும், வழக்கம் போலவே பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்ததாகவும், அப்படி இருந்தும் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என விளாசி தள்ளி இருக்கிறார்.