twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெட்ராஸ் கபே படத்தை ஒரு இடத்திலும் திரையிட அனுமதிக்க மாட்டோம்- சீமான்

    By Sudha
    |

    சென்னை: மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த ஒரு இடத்திலும் திரையிட அனுமதிக்க மாட்டோம். மீறித் திரையிட்டால் தடுத்துப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

    தமிழர்களைத் தீவிரவாதிகளாக காட்டியிருப்பதால் இந்தப் படத்தை எதிர்ப்பதாகவும் சீமான் கூறியுள்ளார்.

    சென்னையில் சீமான் உள்ளிட்ட தமிழர் தலைவர்களுக்கு இந்தப் படத்தை படத் தயாரிப்பாளர்கள் தரப்பில் போட்டுக் காட்டப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார் சீமான்.

    ஜான் ஆப்ரகாம் நடிப்பில்

    ஜான் ஆப்ரகாம் நடிப்பில்

    பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் ஹீரோவாக நடிக்க, சூரஜித் சர்க்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்திப் படம்தான் மெட்ராஸ் கபே.

    பிரபாகரன் வேடத்தில் அஜய் ரத்னம்

    பிரபாகரன் வேடத்தில் அஜய் ரத்னம்

    இப்படத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களின் விடுதலைப் போர் குறித்து படமாக்கியுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வேடத்தில் அஜய் ரத்னம் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

    ராஜீவ்காந்தி படுகொலை

    ராஜீவ்காந்தி படுகொலை

    ராஜீ்வ் காந்தி படுகொலையைத் தடுக்க முயற்சிக்கும் அதிகாரியாக ஜான் ஆப்ரகாம் நடித்துள்ளார்.

    தமிழில் 23ம் தேதி ரிலீஸ்

    தமிழில் 23ம் தேதி ரிலீஸ்

    இந்தப் படத்தை தமிழிலும் டப் செய்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது.

    ராஜீவ் ஹீரோ.. பிரபாகரன் விலல்னா...

    ராஜீவ் ஹீரோ.. பிரபாகரன் விலல்னா...

    படத்தைப் பார்த்த பின்னர் சீமான் கூறுகையில்,மெட்ராஸ் கபே படத்தில் முழுக்க முழுக்க ராஜீவ்காந்தியை கதாநாயகனாகவும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை வில்லன் போலவும் சித்தரித்து இருக்கிறார்கள்.

    ரா எழுதிக் கொடுத்த வசனமா...

    ரா எழுதிக் கொடுத்த வசனமா...

    ராஜபக்சே தயாரிப்பில், சோனியாகாந்தி இயக்கத்தில், இந்திய உளவுத்துறையான ரா திரைக்கதை-வசனத்தில் உருவாக்கப்பட்ட படம் போல் தெரிகிறது.

    புலிகளைக் கேவலப்படுத்தும் திட்டம்

    புலிகளைக் கேவலப்படுத்தும் திட்டம்

    இலங்கையில் நடைபெற இருக்கும் காமென்வெல்த் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள் மத்தியில், விடுதலைப்புலிகள் மிக கேவலமானவர்கள் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.

    தமிழர்களுக்கு எதிரான படம்

    தமிழர்களுக்கு எதிரான படம்

    இது, முழுக்க முழுக்க தமிழர்களுக்கு எதிரான படம். இந்த படத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் வெளியிட விட மாட்டோம் ன்றார் சீமான்.

    English summary
    Naam Tamilar party will not allow the screening of Madras Cafe in not only in TN but rest of the world, said its leader Seeman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X