»   »  படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சி!- கவுண்டமணி

படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சி!- கவுண்டமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறினார்.

49 ஓவுக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.' இதில் சௌந்தர் ராஜா, ரித்விகா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.


கணபதி பாலமுருகன் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது.


Number of actors are high than audience, says Goundamani

விழாவில் கவுண்டமணி பேசுகையில், "இன்றைக்கு படங்கள் ஓடுவதில்லை. வசூலில்லை என்று பலரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது படம் பார்ப்பவர்களை விட நடிப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். இதனால் படங்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அத்தனை படங்களையும் திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. இதுதான் படங்கள் ஓடாததற்கு காரணம்.


நிறைய திரையரங்குகளில் பார்த்தால், படங்களின் ஒரு காட்சிதான் ஓடுகின்றன. திடீர்னு என்று அந்த காட்சியையும் நிறுத்திடறாங்க. இதுக்கெல்லாம் சில கட்டுப்பாடுகள் வேணும். அப்போதான் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.


‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' ஒரு நல்ல நகைச்சுவை படம். சாதிவிட்டு சாதி காதலிக்கும் ஜோடிகளைச் சேர்த்து வைக்கும் கதாபாத்திரம் எனக்கு. இப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட படம் என்பதால் நான் நடிக்க சம்மதித்தேன். காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் அரசியல் போன்ற அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும்," என்றார்.

English summary
Comedy actor Goundamani says that nowadays more people come to acting but the audience are less.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil