»   »  ஓ காதல் கண்மணி இசை... தனக்குப் பிடித்த 'இருட்டில்' வெளியிடும் மணிரத்னம்!

ஓ காதல் கண்மணி இசை... தனக்குப் பிடித்த 'இருட்டில்' வெளியிடும் மணிரத்னம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்னம் இயக்கி வரும் ஒ காதல் கண்மணி படத்தின் இசையை இன்று நள்ளிரவு வெளியிடுகிறார்கள்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

O Kadhal Kanmani audio from Today Midnight

இப்படத்தின் புகைப்படங்கள், டீசர், மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி விட்டன. ஆடியோவை ஏப்ரல் 4-ந் தேதி வெளியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று நடு இரவு 12 மணிக்கு இணையத்தில் இப்படத்தின் பாடலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே என்னை அறிந்தால் படத்தின் இசை - ட்ரைலரும் கூட இப்படித்தான் வெளியாகின.

ஓ காதல் கண்மணி படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Manirathnam will be releasing his O Kadhal Kanmani music on Today midnight.
Please Wait while comments are loading...