For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடிகையை புகழ்வதற்காக மாநிலத்தை குறைத்து மதிப்பிட்ட சர்ச்சை இயக்குநர்.. வச்சு செய்யும் ஒடியா மக்கள்!

  |

  சென்னை: பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மா தனது அடுத்தப்படத்தின் ஹீரோயினை புகழ்வதாக நினைத்து ஒடிசா மாநிலத்தை குறைத்து மதிப்பிட்டதால் அம்மாநில மக்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

  உண்மை சம்பவத்தை படமாக்கும் ராம் கோபால் வர்மா | Pranav இழப்பு

  தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களை இயக்கி வருபவர் ராம் கோபால் வர்மா. பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன ராம் கோபால் வர்மா,

  இந்த லாக்டவுன் நேரத்தில் க்ளைமேஸ் மற்றும் த்ரில்லர் என இரண்டு படங்களை இயக்கினார். இரண்டு படங்களையும் தனது ஆன்லைன் தியேட்டரிலே ரிலீஸ் செய்தார்.

  மூன்றாவது திருமணம்.. சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றிய சூர்யா தேவி.. போலீஸில் புகார் அளித்த வனிதா!மூன்றாவது திருமணம்.. சமூக வலைதளத்தில் கழுவி ஊற்றிய சூர்யா தேவி.. போலீஸில் புகார் அளித்த வனிதா!

   ஆபாச படங்கள்

  ஆபாச படங்கள்

  க்ளைமேக்ஸ் படத்திற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலித்த அவர், நேக்டு படத்திற்கு 200 ரூபாய் வசூலித்து கல்லாக் கட்டினார். ஆனால் அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் ராம் கோபால் வர்மா ஆபாச பட இயக்குநர் ஆகி விட்டார் என விமர்சித்தனர்.

   ஹீரோயின் அறிமுகம்

  ஹீரோயின் அறிமுகம்

  இந்நிலையில் தனது அடுத்தப்படமான த்ரில்லர் படத்தின் நாயகியை அறிமுகம் செய்தார். நாயகி பேண்டீஸுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து மிரள விட்டார். ஓடிசாவை சேர்ந்த அங்கிதா மகாரானா என்ற பெயர் கொண்ட அவரை, அப்சரா ராணி என அறிமுகப்படுத்துகிறார் ராம் கோபால் வர்மா.

   கேள்விப்படவில்லை

  கேள்விப்படவில்லை

  அவரது அழகையும் இளமையையும் புகழும் வகையில் கடந்த திங்கள் கிழமை அப்சராவின் போட்டோக்களை ஷேர் செய்து டிவிட்டியிருந்தார். அதில் ஒரு டிவிட்டில் அப்சராவைச் சந்திப்பதற்கு முன், 1999 ஆம் ஆண்டு சூறாவளியை தவிர ஒடிசாவைப் பற்றி நான் எதையும் கேள்விப்படவில்லை.

  அழகானவர்கள்

  ஆனால், இப்போது அவரைச் சந்தித்த பிறகு, ஒடிசா அனைத்து வகையான சூறாவளிகளையும் உருவாக்குகிறது என்பதை உணர்ந்தேன்.. ஒடிசாவில் அழகானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பெரிய வெளிப்பாடு.. மோர் பவர் டூ ஒடிசா என்று பதிவிட்டிருந்தார்.

   உங்களின் அறிவு

  உங்களின் அறிவு

  ராம்கோபால் வர்மாவின் இந்த டிவிட்டைப் பார்த்து செம கடுப்பாகி இருக்கின்றனர் ஒடிசா மக்கள். ஒடிசாவில் வேறு ஒன்றுமே இல்லையா? இதுபோன்ற அறிவற்ற கமெண்ட்டை எப்படி உங்களால் போட முடிந்தது. இதில் இருந்தே உங்களின் அறிவு எப்படி உள்ளது என்பது தெரிகிறது என விளாசி வருகின்றனர்.

   ஸ்பெல்லிங் மிஸ்டேக்

  ஸ்பெல்லிங் மிஸ்டேக்

  கடந்த இரண்டு மூன்று நாட்களாய் சமூக வலைதளங்களில் ராம்கோபால் வர்மாவை கழுவி ஊற்றியப் போதும், ஆத்திரம் அடங்காத மக்கள் அவரை வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்து வருகின்றனர். ஒடிசா என்று பதிவிடுவதற்கு பதில் ஒரிசா, ஒரிசா என்றே குறிப்பிட்டுள்ளதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

   எதுவும் தெரியாமல்

  எதுவும் தெரியாமல்

  ஒடிசா அரசு எத்தனை சாதனைகளை செய்துள்ளது, பல்வேறு துறைகளிலும் ஒடிசா அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதுவும் தெரியாமல் மாநிலத்தை குறைத்து மதிப்பிடுவதா என வெளுத்து வாங்கியிருக்கின்றனர். ராம் கோபால் வர்மாவின் டிவிட், ஒடிசா அரசின் தகவல் தொழில் நுட்ப செயலாளர் வரை சென்றுள்ளது.

   அறிவின் பற்றாக்குறைதான்

  அறிவின் பற்றாக்குறைதான்

  ஒடிசா அரசின் தகவல் தொழில் நுட்ப செயலாளரான மனோஜ் மிஸ்ரா, கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் டிவிட் நிரூபித்து விட்டது. எல்லா இடத்திலும் முட்டாள்கள் இருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டை பார்த்த ப்ரவாஸ் என்பவர், நிச்சயமாக பொது அறிவின் பற்றாக்குறைதான் இது, மிஸ்டர் பிரம்மா..ஊஊஊப்ப்பஸ்ஸ்ஸ வர்மா என டிவிட்டியுள்ளார்.

   அட்வைஸ் கேட்கவில்லை

  அட்வைஸ் கேட்கவில்லை

  தேசிய விருதுப்பெற்ற அம்மாநில சினிமா தயாரிப்பாளரான நிளமதப் பாண்டாவும் ராம் கோபால் வர்மாவை விளாசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில். உங்களை யாரும் அட்வைஸ் கேட்கவில்லை சார். கூகுள் உள்ளது. அறிவை பெற அதை பாருங்கள். எங்களிடம் பெரிய திறமைகள் உள்ளன, அவற்றில் இயற்கை பேரழிவுகளை எதிர்த்துப் போராடுவது மிகச் சிறந்த ஒன்று. நாங்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதைக் கேட்க உங்களுக்கு இரண்டு நாட்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

   வசமாக சிக்கியிருக்கிறார்

  வசமாக சிக்கியிருக்கிறார்

  இதேபோல் பலரும் ராம் கோபால் வர்மாவை கழுவி ஊற்றி வருகின்றனர். ஏற்கனவே அவருடைய படங்கள் அனைத்தும் ப்ளு ஃபிலிம் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய ஹீரோயினை புகழ்வதாக நினைத்து ஒடிசா மக்களிடம் வசமாக சிக்கியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.

  English summary
  Odia people slams Director Ram Gopal Varma. Ram gopal varma twitted about Odisha, that he dont anything about the state after the 1999 Cyclone.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X