மத்தவங்க டிமாண்டுக்காக குழந்தை பெத்துக்காதீங்க.. 30 வயசுக்கு மேலும் பெத்துக்கலாம்.. சின்மயி ட்வீட்!

சென்னை: பிரபல பின்னணி பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி மற்றும் நடிகர் ராகுல் ரவிந்திரன் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

குழந்தைகளின் பிஞ்சு விரல்களை காட்டியபடி எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்த சின்மயி குழந்தைகளின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், 30 வயதுக்கு மேலும் குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் ட்வீட் போட்டிருக்கிறார்.

இரட்டைக் குழந்தை

இரட்டைக் குழந்தை

மாஸ்கோவின் காவேரி படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்த ராகுல் ரவிந்திரனுக்கும் அந்த படத்தில் சமந்தாவுக்கு குரல் கொடுத்த பாடகி சின்மயிக்கும் இடையே காதல் மலர இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சமீபத்தில் இருவருக்கும் அழகான இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என குழந்தைகளுக்கு பெயர் சூட்டி இருப்பதாக சின்மயி தெரிவித்தார்.

சின்மயிக்கு மோசமான ட்ரோல்

சின்மயிக்கு மோசமான ட்ரோல்

பாடகி சின்மயி கர்ப்பமாக இருக்கும் போதே, இன்னும் உங்களுக்கு குழந்தை இல்லையா? என்றும் இத்தனை ஆண்டுகளும் ஏன் குழந்தை இல்லை என்றும் மிகவும் மோசமான முறையில் சிலர் ட்ரோல் செய்ததையும் குழந்தை பெற்ற பின்னர் நேற்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார் சின்மயி. மேலும், வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெத்துக்கிட்டீங்களா என்றும் எல்லை மீறி கேட்டனர் என்று சாடி இருந்தார்.

30 பிளஸ்ஸில் குழந்தை

30 பிளஸ்ஸில் குழந்தை

37 வயதாகும் பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவரது தோழி ஒருவர் ட்விட்டரில் பெண்களால் 30 பிளஸ் வயசிலும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு நீங்க ஒரு இன்ஸ்பிரேஷன் என உலகத்தில் யாருமே அந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளாத மாதிரி ட்வீட் போட்டிருந்தார். அதற்கு உடனடியாக ஆமாம் 30 வயதுக்கு மேல் ஆனாலும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என சின்மயி பதில் ட்வீட் போட்டுள்ளார்.

அடுத்தவங்க டிமாண்டுக்காக

அடுத்தவங்க டிமாண்டுக்காக

மேலும், அடுத்தவங்க டிமாண்டுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள தோன்றுகிறதோ அப்போது பெற்றுக் கொள்ளுங்கள் என சின்மயி ட்வீட் போட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் சின்மயி மற்றும் ராகுல் ரவிந்திரன் குழந்தை வேண்டாம் என தள்ளிப் போட்டார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாட்டி வயசுல குழந்தை

பாட்டி வயசுல குழந்தை

சமீபத்தில் நடிகை நயன்தாராவை மருத்துவர் ஒருவர் கிண்டல் செய்ததற்கு சின்மயி அவரை புரட்டி எடுக்க காரணமும் இதுதான் என்கின்றனர். ஏனென்றால் சின்மயியையும் அப்போது கர்ப்பமாக இருந்த நிலையில், மருத்துவர் எப்படி அப்படி சொல்லலாம் என விளாசித் தள்ளி இருக்கிறார். மீண்டும் இந்த ட்வீட்டை போட்டு அப்படி பேசிய மருத்துவருக்கு மறுபடியும் ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் சின்மயி.

Recommended Video

Ashok Selvan | 1st Time இந்த படத்துல Stunt பண்ணிருக்கேன் | Vezham |*Interview
மார்வெலில் சின்மயி பாடல்

மார்வெலில் சின்மயி பாடல்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிஸ் மார்வெல் வெப்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பல பாடல்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், இசைப்புயல் இசையில் சின்மயி பாடிய Tere Bina பாடல் இடம்பெற்று அதற்கான கிரெடிட்ஸும் கொடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு தனது சந்தோஷத்தையும் சின்மயி வெளிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் லிங்கா படத்தில் இடம்பெற்ற "ஓ நண்பா" பாடல் இசையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X