பிக்பாஸ் சீசன் 5: புதிய டேக்லைன்.. புதிய செட் ரெடியாம்.. இம்மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல்வேறு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. விஜய் டிவியில் எண்டோமால் நிறுவனத்தால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தொகுப்பாளரான சினிமா நட்சத்திரங்கள்

தொகுப்பாளரான சினிமா நட்சத்திரங்கள்

ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மொழியில் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் நாகார்ஜூனன், நானி, சமந்தா உள்ளிட்டோர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

தமிழில் நடிகர் கமல்ஹாசன்

தமிழில் நடிகர் கமல்ஹாசன்

மலையாளத்தில் அம்மொழி சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன் லால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கன்னடத்தில் நடிகர் சுதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆரி டைட்டில் வின்னர்

ஆரி டைட்டில் வின்னர்

தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் மாடலான ஆரவ் டைட்டில் வின்னரானார். இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னரானார். மூன்றாவது சீசனில் மலேசிய பாடகரான முகென் ராவ் டைட்டிலை வென்றார். நான்காவது சீசனில் நடிகர் ஆரி அர்ஜூனன் வின்னரானார்.

நெகட்டிவ் ரீச் போட்டியாளர்கள்

நெகட்டிவ் ரீச் போட்டியாளர்கள்

டைட்டில் வின்னர் வாய்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு பெரும் பிரபலம் கிடைத்து விடுகிறது. பெரும்பாலும் நெகட்டிவ் ரீச் கொடுக்கும் போட்டியாளர்களே இறுதிவரை மக்கள் மனதில் நிற்கிறார்கள்.

டேமெஜ்ஜான பிக்பாஸ் போட்டியாளர்கள்

டேமெஜ்ஜான பிக்பாஸ் போட்டியாளர்கள்

குறிப்பாக முதல் சீசனில் ஜூலி, இரண்டாவது சீசனில் மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, மூன்றாவது சீசனில் வனிதா, சாக்ஷி, கவின், நான்காவது சீசனில் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா ஆகியோர் நெகட்டிவாக ரீச்சானார்கள்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

இதுவரை நடந்து முடிந்த நான்கு சீசன்களுமே பரபரப்புக்கும் சுவாரசியத்துக்கும் பஞ்சம் இல்லாமல்தான் இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

பிக்பாஸ் சீசன் 5 தாமதம்

பிக்பாஸ் சீசன் 5 தாமதம்

இதனால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம்தான் நிறைவடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசனை வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்க நிகழ்ச்சிக் குழு திட்டமிட்டது. ஆனால் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலை லாக்டவுன் காரணமாக நிகழ்ச்சி தொடங்குவது தாமதமாகியுள்ளது.

சூடு பிடிக்கும் பிக்பாஸ் வேலைகள்

சூடு பிடிக்கும் பிக்பாஸ் வேலைகள்

இதனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபரில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. பிரபலங்கள் பலரிடமும் பிக்பாஸ் டீம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

ஷகிலாவின் மகள் பங்கேற்பு?

ஷகிலாவின் மகள் பங்கேற்பு?

அதன்படி குக் வித் கோமாளி சுனிதா, கனி, முரட்ட சிங்கிள்ஸ் இனியன், ஆர்ஜே வினோத், நடிகர் எம்எஸ் பாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்தது. இதேபோல் பிரபல நடிகையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமுமான ஷகிலாவின் மகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

உறுதியான சீரியல் நடிகர்

உறுதியான சீரியல் நடிகர்

ஆனால் பங்கேற்பாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே சீரியல் நடிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒரு சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ஒருவர், இந்த சீசனில் பங்கேற்பது உறுதி என்று கூறப்படுகிறது.

கேரியர் காலியாகிவிடும் என அச்சம்

கேரியர் காலியாகிவிடும் என அச்சம்

அதேநேரத்தில் பல பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒரு பக்கம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனாலும் மறுப்பக்கம் எதிர் மறையான ஒரு பிம்பம் உருவாகி மொத்த கேரியரையும் காலி பண்ணிவிடும் என்று அஞ்சுகிறார்களாம் பிரபலங்கள்.

கமலுக்கு பதில் வேறு நடிகர்

கமலுக்கு பதில் வேறு நடிகர்

இதனிடையே கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று முதலில் தகவல் வெளியானது. அவருக்கு பதில் நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது.

கமல் தொகுத்து வழங்குவது உறுதி

கமல் தொகுத்து வழங்குவது உறுதி

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக கமல் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கினார் என்றும் அதை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்திவிட்டார் என்றும் கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய பிரபலம் ஒருவர் தெரிவித்து இருந்தார். எனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் கமல்தான் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டை புதுப்பிக்கும் பணிகள்

பிக்பாஸ் வீட்டை புதுப்பிக்கும் பணிகள்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிக்பாஸ் வீட்டை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கமலின் கெட்டப் எப்படி இருக்கும்?

கமலின் கெட்டப் எப்படி இருக்கும்?

மேலும் நிகழ்ச்சிக்கான புதிய டேக் லைனோடு லோகோவும் ரெடியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருவதால் இந்த சீசனில் கமல் ஹாசனின் கெட்டப் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X