»   »  ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' - பிக்பாஸ் பைனலில் அறிவிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' - பிக்பாஸ் பைனலில் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதி நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இந்த மேடையில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

இந்த நிகழ்ச்சியில் முன்பு எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஓவியாவும் வருவதால் பிக்பாஸ் மற்றும் ஓவியாவின் ரசிகர்கள் நிகழ்ச்சியைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Official announcement of Indian 2 in biggboss show

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது.

இந்த அறிவிப்பை பிக்பாஸ் மேடையில், இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய மூவரும் இணைந்து வெளியிட இருக்கிறார்கள்.

ஊழல் நிர்வாகத்திற்கு எதிராக 21 ஆண்டுகளுக்கு வெளியான படத்தின் இரண்டாம் பாகம் ஊழல் அரசை நோக்கிச் சாட்டையைச் சுழற்றும்படியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

English summary
The grand finale of the Biggboss show hosted by KamalHassan is going to be held today. The official announcement of KamalHaasan's new film will be released on this occasion. The announcement of the second part of Kamal's 'Indian 2' is directed by Shankar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil