OG Box Office: ஓஜி முதல் நாள் வசூல்.. கூலி முதல் நாள் வசூல் சாதனையை முந்திய பவன் கல்யாண் படம்!

சென்னை: இந்தியாவில் மட்டுமே ஓஜி திரைப்படம் முதல் நாள் முடிவில் சுமார் 100 கோடி வசூலை நெருங்கியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஓஜி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையிலும் ரசிகர்களுக்கு தேவையான பக்காவான படமாக சுஜித் கொடுத்த நிலையில், பாக்ஸ் ஆபீஸ் பட்டையை கிளப்புகிறது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என இப்போதே டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் டிக்கெட்டுகளுக்கு செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் முதல் நாளில் 151 கோடி வசூலை ஈட்டிய நிலையில், பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் அந்த ரெக்கார்டை முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

OG Day 1 Box Office Collection Worldwide beats Rajinikanth s Coolie Day 1

ஆனால், கேம் சேஞ்சரின் முதல் நாள் ரெக்கார்டு என அடிக்கப்பட்ட போஸ்டரை பவன் கல்யாண் படம் தாண்டுமா? என்பது டவுட்டு தான் என்கின்றனர்.

ராம் சரண் முதல் நானி வரை: பவன் கல்யாணின் ஓஜி படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், சித்தப்பா படத்தை பாராட்டி ராம்சரண் ஃபயர் விட்டுள்ளார். மேலும், நடிகர் நானியும் ஒரிஜினல் ஜெயண்ட் பாக்ஸ் ஆபீஸ் டிஸ்ட்ரக்டர் என ட்வீட் போட்டு ஓஜி படத்தை கொண்டாடி வருகிறார். டோலிவுட் சினிமா பிரபலங்கள் ஓஜி படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக்கும் முடிவுடன் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

ஓஜி பட்ஜெட்: சாஹோ படத்தை இயக்கிய சுஜித் பவன் கல்யாண், ஹிம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகனை வைத்து இயக்கியுள்ள ஓஜி படத்தின் பட்ஜெட் 250 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விஷுவல்ஸ் எல்லாம் மிரட்டலாக உள்ள நிலையில், படத்தை பார்க்க பவன் கல்யாண் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த டோலிவுட் ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முதல் நாள் வசூல்: பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் நேற்று முன் தினமே ப்ரீமியர் காட்சி வெளியானது. அதில் மட்டுமே 20.25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று இந்தியளவில் ஓஜி திரைப்படம் 70 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை ப்ரீமியர் மற்றும் முதல் நாள் கலெக்‌ஷன் 90.25 கோடி ரூபாய் என சாக்னிக் வெப்சைட் (Early Estimates) கணக்கை வெளியிட்டுள்ளது. கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூலை இந்தியாவில் மட்டுமே பவன் கல்யாணின் ஓஜி வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூலி முதல் நாள் வசூல் முறியடிப்பு?: ரஜினிகாந்தின் கூலி முதல் நாள் வசூல் 151 கோடி என சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில், ஓஜி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரை DVV எண்டர்டெயின்மெண்ட் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய படங்களிலேயே ப்ரீமியரில் அதிக வசூல் செய்த படம் ஓஜி தான் என அறிவித்துள்ளது. ஓவர்சீஸில் சுமார் 60 கோடி அளவுக்கு பவன் கல்யாண் படம் வசூல் செய்திருக்கும் என்றும் ஒட்டுமொத்தமாக 152 முதல் 155 கோடி வசூல் இதுவரை வந்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X