»   »  இவங்களுக்குள்ள இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா: வியக்க வைக்கும் ஓகேகே

இவங்களுக்குள்ள இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா: வியக்க வைக்கும் ஓகேகே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் இடையே இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா என்று பலரும் வியக்கிறார்கள்.

தொடர் தோல்விகளை சந்தித்துள்ள மணிரத்னம் இயக்கியுள்ள படம் தான் ஓகே கண்மணி. துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து அழகிய காதல் கதையை தனக்கே உரிய பாணியில் கையாண்டுள்ளார்.


இந்த படம் நிச்சியம் வெற்றி பெற்று தனது கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக அமையும் என மணிரத்னம் நம்புகிறார்.


இசை

இசை

படத்தில் வரும் மென்டல் மனதில் பாடல் டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ரஹ்மானின் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் வரும் 27ம் தேதி வெளியாகிறது. பாடல்களை கேட்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் இடையே இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா என்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் மணி.


அலைபாயுதே

அலைபாயுதே

படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் நமக்கு அலைபாயுதே மாதவன், ஷாலினி நினைவுக்கு வருகிறார்கள்.


காதல் கதை

காதல் கதை

மென்மையான காதல் கதையை கையில் எடுத்துள்ளார் மணி. இந்த படத்தை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் எனலாம் என்று ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.


தெலுங்கு

தெலுங்கு

ஓகே கண்மணி தெலுங்கில் ஓகே பங்காரம் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸாக உள்ளது.


ஏப்ரல்

ஏப்ரல்

ஏப்ரல் மாதம் பல தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. அந்த ரேஸில் ஓகே கண்மணியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
The chemistry between Dulquer Salman and Nithya Menon in OK Kanmani has got the attention of fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil