»   »  அந்த தியேட்டர் திறக்காமலே இருக்கட்டும்!

அந்த தியேட்டர் திறக்காமலே இருக்கட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையரங்க உரிமையாளருக்கு கட்டுபடி ஆகவில்லையாம், ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்கள்.

இதுபற்றி அவர்களிடம் கேட்டால் இப்படித்தான் சொல்கின்றார்கள்.

Ok, You can close the theaters

"ஏன் கட்டுபடி ஆகவில்லை?"

"வரி கட்டவேண்டும், அதுதான் சிக்கல்."

"சரி அதுபோக என்ன சிக்கல்?"

"படப்பெட்டிக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கின்றது, அதனால் வரி கட்ட மாட்டோம். எம் படம் என் உரிமை."

"படப் பெட்டிக்கு ஏன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கின்றது?"

"தயாரிப்பாளர் வட்டிக்கு எல்லாம் வாங்கி படமெடுப்பார், வட்டி என்ன தெரியுமா? ஐயோ பாவம்."

"வட்டிக்கு வாங்கி படமெடுக்க என்ன அவசியம்?"

"நடிகர் சம்பளம், நடிகை சம்பளம் , இயக்குநர் சம்பளம் , படபிடிப்பு, கிராபிக்ஸ் (விஜய் உதட்டசைவினை, அஜித் குரலை சொல்வாரோ) செலவு மிக அதிகம்"

"ஓஹோ .. அப்படியானால் தயாரிப்பாளர் வட்டிக்கு வாங்கி நடிகனுக்கும், நடிகைக்கும், இயக்குநனருக்கும் பங்கு வைத்து கொடுப்பார்"

"ஆமாம்"

"அதனால் செலவு பெருகும் அந்த செலவினை தியேட்டரில் வசூலித்து தா என உங்களை நெருக்கிகின்றார்கள் அப்படித்தானே"

"அதேதான்"

"இந்த நடிகர்கள் சம்பளத்தைக் குறைத்தால் தயாரிப்பு செலவு குறையும், படபெட்டி விலை குறையும் டிக்கெட் உட்பட செலவு குறையும் அல்லவா?"

"நிச்சயம் குறையும்"

"அப்படியானால் அந்த சம்பளம்தான் சிக்கலா?"

"ஆம் அதேதான்"

"நடிகனும், நடிகையும் இன்னும் சிலரும் கோடி கணக்கில் சம்பளம் வாங்க தயாரிப்பாளர் வட்டிக்கு கடன் வாங்க வேண்டும், அதனை தியேட்டர்காரர் கொள்ளை விலைக்கு விற்று சரிகட்ட வேண்டும், வரியும் கட்ட கூடாது, அப்படியா?"

"ஆமாம் தம்பி"

"அந்த தியேட்டர் திறக்காமலே இருக்கட்டும், முடிந்தால் நூலகமாக்கி விடுங்கள், இல்லாவிட்டால் டெங்கு காய்ச்சலுக்கு திறந்த மருத்துவமனை ஆக்குங்கள், சமூகத்திற்கு உதவியாக இருக்கும்."

- ஸ்டான்லி ராஜன்

English summary
Stanley Rajan's satire on Theaters strike against imposing local taxes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil