»   »  'வவ்வால்' பாண்டியாக ராஜேந்திரன்: ஓம் சாந்தி ஓம்... குழந்தைகளுக்கும் பிடித்த பேய்ப் படம்!

'வவ்வால்' பாண்டியாக ராஜேந்திரன்: ஓம் சாந்தி ஓம்... குழந்தைகளுக்கும் பிடித்த பேய்ப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் சாந்தி ஓம் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

வழக்கமாக பேய், பிசாசு, ஆவி சம்பந்தப்பட்ட படங்கள் என்றாலே கொலை, பலாத்காரம், பழி வாங்கல் என ரத்தக் களறியாக இருக்கும். எனவே இப்படங்களை பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என ஏ சான்றிதழ் அல்லது யு ஏ சான்றிதழ் வழங்கப் படுவது வழக்கம்.

ஆனால், சமீபகாலமாக பேய்களையும் நல்லவர்களாகக் காட்டும் படங்கள் வெளிவந்துள்ளன. பிசாசு படமே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஓம் சாந்தி ஓம்...

ஓம் சாந்தி ஓம்...

இந்த வரிசையில் ஸ்ரீகாந்த் நடிக்கும் 'ஓம் சாந்தி ஓம்' படமும் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். இதில் நீலம் உபாத்யாயா நாயகியாக நடிக்கிறார். 'நான் கடவுள்' ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

நான் கடவுள் ராஜேந்திரன்...

நான் கடவுள் ராஜேந்திரன்...

சமீபகாலமாக கொடூர வில்லனில் இருந்து காமெடியில் கலக்கும் 'நான் கடவுள் 'ராஜேந்திரன், இப்படத்தில் வவ்வால் பாண்டியாக முழுநீள நகைச்சுவை பாத்திரத்தில் கலகலப்பூட்டி கலக்கி இருக்கிறாராம்.

சூர்ய பிரபாகர் இயக்கத்தில்...

சூர்ய பிரபாகர் இயக்கத்தில்...

இப்படத்தை இயக்குனர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராஜேஷ் ஆகியோரிடம் பணிபுரிந்து சூர்ய பிரபாகர் என்பவர் இயக்கியுள்ளார். விஜய் எபிநேசர் இசையமைத்துள்ளார். படத்தை 8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ளார்.

யுஏ சான்றிதழ்...

யுஏ சான்றிதழ்...

வழக்கமாக திகில் படங்களுக்கு யு ஏ சான்றிதழ் தரும் தணிக்கை துறையினர், இப்படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும், குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக எடுத்ததற்காக படக்குழுவினரையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்

அங்கோர்வாட் கோயில்...

அங்கோர்வாட் கோயில்...

திருச்சியில் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப் பட்டிருந்தாலும், படப்பிடிப்பு சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலும் நடைபெற்றது. இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முதலாக கம்போடியா அங்கோர்வாட் கோயிலிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.

ஜாலி பேய்ப்படம்...

ஜாலி பேய்ப்படம்...

முழுக்க முழுக்க திகில், நகைச்சுவை கலந்த ஜாலி பேய்ப் படமாக உருவாகியிருக்கும் இப்படம் குழந்தைகள் முதல் பெயரிவர்கள்வரை அனைவரும் கவரும்படியாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

English summary
Actor Srikanth's most awaited film 'Om Shanthi Om' has been cleared by the Censor Board with a ‘U’ certificate, meaning everyone from kids to adults can watch the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil