»   »  நான் சொல்லும் வரைக்கும் வாயே திறக்கக் கூடாது: ப்ரியா வாரியருக்கு இயக்குனர் உத்தரவு

நான் சொல்லும் வரைக்கும் வாயே திறக்கக் கூடாது: ப்ரியா வாரியருக்கு இயக்குனர் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரியா பிரகாஷ் வாரியர் biography

திருவனந்தபுரம்: நடிகை ப்ரியா வாரியருக்கு இயக்குனர் ஒமர் லூலூ ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம்.

ஒமர் லூலூ இயக்கி வரும் ஒரு அடார் லவ் படம் மூலம் நடிகையாகியுள்ளார் ப்ரியா பிரகாஷ் வாரியர். படத்தின் ஒரு பாடல் வீடியோ வெளியாக அதில் ப்ரியா கண் ஜாடை காட்டியதை பார்த்து அனைவரும் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.

இந்த காரணத்தால் படம் ரிலீஸாகும் முன்பே ப்ரியா ஏகப் பிரபலமாகிவிட்டார்.

சுவிட்ச் ஆப்

சுவிட்ச் ஆப்

ப்ரியா வாரியருக்கு வாட்ஸ் ஆப்பில் ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்துள்ளது. இதையடுத்து அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி

பேட்டி

ப்ரியா ஒரு அடார் லவ் பற்றி கைரலி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். இதை பார்த்த இயக்குனர் ஒமர் ப்ரியா வாரியருக்கு ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம்.

படம்

படம்

ஒரு அடார் லவ் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது. படம் வெளியாகும் வரை யாருக்கும் பேட்டி கொடுக்கவே கூடாது என்று ஒமர் ப்ரியா வாரியரிடம் கறாராக தெரிவித்துவிட்டாராம்.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

முதல் படம் ரிலீஸாகும் முன்பே மல்லுவுட், கோலிவுட் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ப்ரியா. நிச்சயம் கோலிவுட் பக்கம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Oru Adaar Love director Omar Lulu has reportedly asked Priya Prakash Varrier not to give interviews to any one till the movie release. Priya has become a national crush by winking.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil