»   »  தெலுங்கு மக்கள் சென்டிமென்ட் முட்டாள்கள்: சிரஞ்சீவி

தெலுங்கு மக்கள் சென்டிமென்ட் முட்டாள்கள்: சிரஞ்சீவி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கு பேசும் மக்கள் சென்டிமென்ட் முட்டாள்கள் என்று தாகூர் படத்தில் வந்த வசனம் உண்மையாகும் என்று தான் நினைக்கவில்லை என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

திரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்ற சிரஞ்சீவி அங்கு பிசியாக இருந்து விட்டார். இதனால் சில காலம் அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ஹீரோவாக நடித்த கைதி எண் 150 படம் ஜனவரி மாதம் வெளியானது.

விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்கே கைதி எண் 150 ஆகும்.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

சிரஞ்சீவி சில ஆண்டுகள் கழித்து நடிக்க வந்தபோதிலும் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் கைதி எண் 150 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

சிரஞ்சீவி நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான தாகூர் படத்தில் தெலுங்கு மக்கள் சென்டிமென்ட் முட்டாள்கள் என்று ஒரு வசனம் வரும். அது உண்மையாகும் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

ஸ்டார்

ஸ்டார்

ரசிகர்கள் என்னை மீண்டும் ஸ்டாராக உணர வைத்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக நான் நடிக்காமல் இருந்தது போன்றே இல்லை. என் மீது காட்டும் அளவுக்கு அதிகமான அன்புக்கு தெலுங்கு ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்கிறார் சிரஞ்சீவி.

ரசிகர்கள்

ரசிகர்கள்

கைதி எண் 150 படத்தை விளம்பரப்படுத்த நான் பயணம் செய்தபோது மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு அளவே இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். கைதி எண் 150 தியேட்டர்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chiranjeevi who returned to silver screen after some years said that, "Telugu prajalu sentimental fools,' ani naa cinema Tagore lo dialogue undi. But I never thought it would become a reality."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil