»   »  என்னை விட்டுட்டு எப்படி சாப்பிடலாம்: சக நடிகரை ஷூவால் அடித்த நகைச்சுவை நடிகர்

என்னை விட்டுட்டு எப்படி சாப்பிடலாம்: சக நடிகரை ஷூவால் அடித்த நகைச்சுவை நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விமானத்தில் தனக்கு முன்பு உணவு சாப்பிட்டதற்காக நடிகர் கபில் சர்மா கோபம் அடைந்து சக நடிகர் சுனில் குரோவரை அறைந்ததும் இல்லாமல் ஷூவால் அடித்துள்ளார்.

நடிகர் கபில் சர்மா 'தி கபில் சர்மா ஷோ' என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். கபில் சர்மா ஷோ குழு ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டது.

ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் நாடு திரும்பியபோது கபில் குடிபோதையில் சக நடிகரான சுனில் குரோவரை தாக்கினார். இந்நிலையில் விமானத்தில் நடந்த சம்பவத்தை பார்த்த பயணி ஒருவர் கூறியிருப்பதாவது,

கபில்

கபில்

கபில் ஒரு விஸ்கி பாட்டிலை எடுத்து அதை முழுவதுமாக குடித்தார். அவர் விஸ்கி குடித்துக் கொண்டிருந்தபோது சிப்பந்திகள் அனைவருக்கும் உணவு வழங்கினர்.

உணவு

உணவு

கபில் சர்மா குழுவினர் உணவை வாங்கி சாப்பிடத் துவங்கினர். இதை பார்த்த கபில் நான் சாப்பிடும் முன்பு நீங்கள் எப்படி சாப்பிடலாம் என்று தனது குழுவினரை திட்டினார்.

சுனில்

சுனில்

குடிபோதையில் கபில் திட்டுவதை பார்த்த சுனில் அவரை சமாதானம் செய்தார். அதற்கு கபிலோ தனது ஷூவை கழற்றி அவரை அடித்தார். மேலும் சுனிலின் சட்டை காலரை பிடித்து கன்னத்தில் பலமுறை அறைந்தார்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

கபிலின் செயலை பார்த்த குழுவினர் உணவு சாப்பிடுவதை பாதியில் நிறுத்திவிட்டு அதை சிப்பந்திகளிடமே கொடுத்துவிட்டார்கள். சக பயணிகள் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் கபில் சப்தமாக கெட்ட வார்த்தைகளால் குழுவினரை திட்டினார். சிப்பந்திகள் அவரை அமைதியாக இருக்குமாறு கூறியும் கேட்கவில்லை.

English summary
According to an eye witness, Kapil Sharma hit actor Sunil Grover with his shoe as his team started eating food before him on a flight from Australia.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil