»   »  போதும் மகனே, நீ காதலிச்சது: இளம் ஹீரோவுக்கு தீவிரமாக பெண் தேடும் அம்மா

போதும் மகனே, நீ காதலிச்சது: இளம் ஹீரோவுக்கு தீவிரமாக பெண் தேடும் அம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருக்கு தானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க அவரின் தாயும், நடிகையுமான நீத்து கபூர் முடிவு செய்துள்ளாராம்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்தார். அந்த காதல் முறிந்து தீபிகா நடிகர் ரன்வீர் சிங்கின் காதலியாகிவிட்டார். ரன்பிர் நடிகை கத்ரீனா கைஃபை காதலித்து வந்தார்.

OMG, Ranbir Kapoor to marry a bride of his mom's choice!

அவர்கள் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இந்நிலையில் ரன்பிர் தற்போது டெல்லியை சேர்ந்த மாடல் அழகி ஒருவரை டேட் செய்து வருகிறாராம்.

மகனின் காதல் தோல்விகள் பற்றி பாலிவுட்டில் பேச்சாக கிடப்பதை பார்த்த நடிகை நீத்து கபூர் ஒரு முடிவு செய்துள்ளார். அதாவது நடிகை இல்லாத ஒரு பெண்ணை தானே பார்த்து மகன் ரன்பிருக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்துள்ளாராம்.

போதும் மகனே, நீ காதலித்தது ஒழுங்காக நான் பார்க்கும் பெண்ணை மணந்து குடும்பஸ்தானாகு என்று ரன்பிரிடம் நீத்து தெரிவித்துள்ளாராம். மகனிடம் கூறியதோடு மட்டும் இல்லாமல் பெண் பார்க்கும் வேலையை ஏற்கனவே துவங்கிவிட்டார் நீத்து.

English summary
One of the most eligible bachelors of Bollywood Ranbir Kapoor might tie the knot soon as his mother Neetu Kapoor is already hunting a bride for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil