»   »  'அமிக்சர்கள், அரசியல்வியாதிகள்': இயக்குனர் பாண்டிராஜின் அடடே ட்வீட்

'அமிக்சர்கள், அரசியல்வியாதிகள்': இயக்குனர் பாண்டிராஜின் அடடே ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்சர் மீம்ஸ் தூள் கிளப்பும் நேரத்தில் அமிக்சர்கள் பற்றி ட்வீட்டியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. மெரினா கடற்கரையில் இளைஞர்கள் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் போராடி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாண்டிராஜ்

இயக்குனர் பாண்டிராஜ் ட்விட்டரில், சிலபேருக்கும் இந்த போராட்டத்துக்கும் சம்மந்தமே இல்லையாம். தமிழ்னா என்ன தெரியுமா?தமிழன்னா யாரு தெரியுமானு டயலாக் மட்டும் எழுதுங்க!பேசுங்க! என தெரிவித்திருந்தார்.

நெட்டிசன்ஸ்

நெட்டிசன்ஸ்

பாண்டிராஜின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் ஒரு இளம் நடிகரின் பெயரை குறிப்பிட்டு அவரை தானே மறைமுகமாக சொல்கிறீர்கள். துணிச்சலாக நேரே சொல்ல வேண்டியது தானே என்றார்கள்.

அமிக்சர்கள்

நெட்டிசன்களின் விமர்சனத்தை பார்த்த பாண்டிராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் நடிகர்கள மட்டும் சொல்லலே.
இயக்குனர்கள்,
எழுத்தாளர்கள்,
அரசியல்வியாதிகள்,
அமிக்சர்கள்,
சாமி,
காளி ,
தயிர்,
ராம்கோபால்,
சிலமீடியாக்கள் ... என தெரிவித்துள்ளார்.

மிக்சர் மீம்ஸ்

மிக்சர் மீம்ஸ்

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரபலம் ஒருவரை வைத்து மிக்சர் மீம்ஸ் போடுகிறார்கள். இந்நிலையில் பாண்டிராஜ் அமிக்சர்கள், அரசியல்வியாதிகள் பற்றி பேசியுள்ளார்.

English summary
When mixture memes are doing rounds, director Pandiraj's bold tweet has attracted the attention of many.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil