»   »  பிரேம் ரத்தன் தன் பாயோவில் சோனம் கபூர் வேண்டாம்: சல்மான் கான் அடம்

பிரேம் ரத்தன் தன் பாயோவில் சோனம் கபூர் வேண்டாம்: சல்மான் கான் அடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் தன்னை நடிக்க வைக்க வேண்டாம் என்று சல்மான் கான் கூறியதாக நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், சோனம் கபூர் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் பிரேம் ரத்தன் தன் பாயோ. பிற படங்கள் சில கோடிகள் வசூலிக்க சிரமப்படுகையில் சல்மான் படம் எளிதில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் பல கோடிகளை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சோனம் கபூர் படம் பற்றி கூறுகையில்,

சல்மான்

சல்மான்

பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் எனக்கு ஜோடியாக சோனம் கபூர் வேண்டாம் என்று சல்மான் கூறியதாக நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான்.

இயக்குனர்

இயக்குனர்

சல்மான் கூறியது பற்றி அறிந்து நான் கோபமோ, வருத்தமோ படவில்லை. சல்மான் எதற்காக அப்படி கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பிரேம் ரத்தன் தன் பாயோவில் நான் தான் நடிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் சூரஜ் உறுதியாக இருந்தார்.

காதல்

காதல்

சல்மான் கான் முழுநீள காதல் படத்தில் நடித்து பல காலம் ஆகிவிட்டது. அதனால் தான் எந்த நடிகையுடன் ரொமான்ஸ் செய்வது என்பதில் தயக்கம் காட்டியுள்ளார்.

நடிப்பு

நடிப்பு

சூரஜ் நான் தான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருந்ததால் சல்மான் கடைசியில் ஒப்புக் கொண்டார். படத்தில் என் நடிப்பை பார்த்து சல்மானே என்னை பாராட்டினார்.

பாராட்டு

பாராட்டு

சல்மான் என்னை பாராட்டியது உண்மை தான் ஆனால் என்னிடம் இல்லை. சல்மான் எப்பொழுதுமே ஒருவரை அவரை நேரில் பாராட்ட மாட்டார். மாறாக தான் பார்க்கும் அனைவரிடமும் அந்த நபரை பாராட்டுவார். அப்படி தான் அவர் என்னைப் பற்றியும் பிறரிடம் பாராட்டியுள்ளார்.

அன்பு

அன்பு

சல்மான் என்னிடம் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். இல்லை என்றால் சும்மா சும்மா வம்பிழுத்துக் கொண்டே இருப்பார் என்று சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

English summary
Sonam Kapoor revealed some interesting details about Salman Khan in an interview. When asked, ''Salman initially had doubts about you being opposite him in the film. Correct?'' Sonam Kapoor replied, ''Yes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil