»   »  மீண்டும் ஸ்போர்ட்ஸ் கதையோடு களம் இறங்குகிறார் இயக்குநர் சுசீந்திரன்!

மீண்டும் ஸ்போர்ட்ஸ் கதையோடு களம் இறங்குகிறார் இயக்குநர் சுசீந்திரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீண்டும் ஸ்போர்ட்ஸ் கதையோடு சுசீந்திரன்!- வீடியோ

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன். சுசீந்திரனின் அப்பா வைத்திருந்த நிஜ கபடிக்குழுவின் பெயரையே தனது முதல் படத்திற்கு டைட்டிலாக வைத்திருந்தார். கபடி பேக் ட்ராப்பில் வெளிவந்த அந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைத்தது. ரஜினி அழைத்து பாராட்டிப் பரிசளித்தார்.

அதன் தொடர்ச்சியாக சூர்யாவின் தம்பி கார்த்திக்கை வைத்து எடுக்கப்பட்ட 'நான் மாகான் அல்ல' படம் மூலம் கமெர்ஷியல் இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். சில படங்கள் அவருக்கு கை கொடுத்தாலும் 'ராஜபாட்டை' மாதிரி படு தோல்விப் படமும் அவரது லிஸ்டில் உண்டு.

Once again Suseenthiran goes to sports ground

அந்தத் தோல்வியிலிருந்து அவரை மீட்டெடுத்த படம் 'ஜீவா'. விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியல் பேசுகிற கதையாகப் பண்ணியிருந்தார்.

சினிமாவிற்கு வந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் கதையோடு களம் இறங்கப் போகிறார். இந்தக் கதை முழுக்க ஃபுட்பால் விளையாட்டு பின்னணியில் நடக்கிறது. முதல் இரண்டு படங்களிலும் ஹீரோக்கள், முக்கியமான நடிகர்கள் தவிர்த்து எல்லோருமே அந்த விளையாட்டில் 'கில்லி'யாக இருப்பவர்களைத் தேடிப்பிடித்து நடிக்க வைத்திருந்தார்.

அதைப்போலவே இந்தக் கதைக்கும் ஃபுட்பால் விளையாட்டு தெரிந்த, நடிக்க விருப்பம் உள்ள ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் சென்ட்டிமென்ட்!

English summary
Director Suseenthiran is once again going to direct a soprts based story as his next

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X