Don't Miss!
- News
டிஜிட்டல் நூலகம்.. சபாஷ்! ஆனா.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத பட்ஜெட் : விஜயகாந்த்
- Lifestyle
உங்க நரை முடியை போக்கவும் நீளமான பளபளப்பான கூந்தலை பெறவும் உருளைக்கிழங்கை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Finance
வருமான வரி சலுகை முதல் வரி அதிகரிப்பு வரை.. சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் என்ன பலன்?
- Sports
வாழ்வா? சாவா? போட்டியில் ரிஸ்க்.. டாஸில் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவு.. இந்திய அணி ஜெயிக்குமா??
- Automobiles
பெண் செய்த காரியத்தால் நொறுங்கிய கடை! இதனால கூட விபத்து நடக்குமா! சுத்தி இருந்த எல்லாரும் ஆடி போயிட்டாங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒன்ஸ் அப்பான் எ டைம்.. அரசியல் பேசிய சினிமா பிரபலங்கள்.. இப்போ அமைதியோ அமைதி.. பிரகாஷ் ராஜ் ட்வீட்!
சென்னை: ஜஸ்ட் ஆஸ்கிங் என்கிற ஹாஷ்டேக் போட்டு பாஜக அரசுக்கு எதிராக ஏகப்பட்ட கேள்விகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து முன் வைத்து வருகிறார் நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ்.
பெட்ரோல், டீசல் விலைவாசி ஏற்றம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் ஆட்சியில் பேசிய சினிமா பிரபலங்கள் எல்லாம், தற்போது அதை விட பல மடங்கு விலைவாசி ஏறி உள்ள நிலையில், அமைதி காப்பது ஏனோ என்கிற கேள்வியை முன் வைத்து இருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
அவரது ட்வீட்டுக்கு கீழ் பாஜக அரசை விமர்சித்தும், ஆதரித்தும் ஏகப்பட்ட கமெண்டுகள் குவிந்துள்ளன.
பிரபல
பாலிவுட்
நாயகியுடன்
இணையும்
ஜிவி
பிரகாஷ்..
நடிப்பா
-இசையா..
சொல்லலியே
பாஸ்!

வாரிசு, பொன்னியின் செல்வன்
கேஜிஎஃப் 2ம் பாகத்தில் கதையை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து ஏகப்பட்ட பெரிய படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழராக நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். மேலும், விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். சினிமாவில் எந்த அளவுக்கு பிசியாக இருக்கிறாரோ அதே அளவுக்கு அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறார்.

பாஜகவிற்கு எதிராக
தன்னுடைய நண்பரும் எழுத்தாளருமான கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் பிரகாஷ் ராஜ். #justasking என்கிற ஹாஷ்டேக் போட்டு பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான கேள்விகளையும் வாதங்களையும் முன் வைத்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு பெங்களூருவில் லோக் சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் குறைவான ஓட்டுக்களை பெற்று தோல்வியைத் தழுவினாலும், தொடர்ந்து தனது அரசியல் கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.

ஒன்ஸ் அப்பான் எ டைம்
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பகக்த்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் "Once upon a time...in my country.. #justasking" என்கிற ட்வீட்டை போட்டு இருக்கிறார். அதில், அவர் ஷேர் செய்துள்ள ஸ்க்ரீன் ஷாட்டில் தான் அவர் சொல்ல வந்த முக்கிய விஷயமே அடங்கி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எந்த விஷயத்துக்கெல்லாம் சினிமா பிரபலங்கள் கொந்தளித்தார்களோ, தற்போது அவர்கள் ஏன் வாயை திறக்கவில்லை எனக் கேட்டுள்ளார்.

அனுபம் கெர் முதல் ஷில்பா ஷெட்டி வரை
காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கடந்த 2012ல் பெட்ரோல் விலை ஏற்றத்தை கிண்டல் செய்து ட்வீட் போட்டு இருக்கிறார். அந்த படத்தில் நாயகனாக நடித்த பாஜக ஆதரவாளர் அனுபம் கெர் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளதாக 2013ல் விளாசி தள்ளி இருந்தார். நடிகை ஷில்பா ஷெட்டி டாலர் எக்ஸ்கலேட்டரில் போகுது, இந்திய ரூபாய் வென்டிலேட்டரில் படுத்துக் கிடக்குதுன்னு கலாய்த்திருக்கிறார். அமிதாப் பச்சன் Rupeed என்கிற புதிய வார்த்தையே கண்டு பிடித்து இருந்தார். ஜூஹி சாவ்லா ஜட்டியுடன் டாலர் மதிப்பு உயர்ந்ததை கேலி செய்திருந்தார்.

அமைதியோ அமைதி
ஆனால், தற்போது 2022ல் அந்த விலை வாசியை எல்லாம் கடந்து பல மடங்கு விண்ணை முட்டும் அளவுக்கு விலை வாசி ஏறியிருக்கும் சூழலில் இந்த பிரபலங்கள் எல்லாம் எங்கே காணாமல் போய் விட்டார்கள் என்று கிண்டல் செய்யும் விதமாக இப்படியொரு ட்வீட்டை ஜஸ்ட் ஆஸ்கிங் ஹாஷ்டேக் போட்டு பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதே சமயம் பாஜகவினர் பிரகாஷ் ராஜை திட்டித் தீர்த்து வருகின்றனர்.