twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் படத்தோடு சரக்கு தீர்ந்த இயக்குநர்கள்!

    |

    முதல் படம் மட்டுமல்ல இரண்டாவது படமும் ஒரு இயக்குநருக்கு ரொம்ப்ப்பவே முக்கியம். தான் பார்த்து பார்த்து செதுக்கிய கதையை முதல் படத்தில் இயக்கும் இயக்குநர்கள் இரண்டாவது படத்திலேயே தன்னிடம் சரக்கு இல்லை என்று நிரூபித்து விடுகிறார்கள். அப்படி 2016ல் பல இயக்குநர்கள் காலை வாரினார்கள்.

    திருக்குமரன்

    திருக்குமரன்

    சிவகார்த்திகேயனை வைத்து மான் கராத்தே என்ற ஹிட் படத்தை கொடுத்தவர், அடுத்த படமான கெத்து வில் உதயநிதியை வைத்து வாரினார். மான் கராத்தேவிலேயே சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற படத்தின் காட்சிகளை அப்படியே வைத்து கைதட்டல் வாங்கியவர் இரண்டாவது படத்தின் லைனிலேயே சொதப்பினார். உதயநிதி வாழ்க்கையில் நினைக்கவே கூடாத படமாக அமைந்தது கெத்து. இயக்குநருக்கு இப்போது படம் இல்லை.

    ராம்பிரகாஷ் ராயப்பா

    ராம்பிரகாஷ் ராயப்பா

    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற ஃபேண்டஸி படத்தால் அறிமுகமானவர். முதல் படத்தில் பெரிய காஸ்டிங் இல்லாமல் திரைக்கதையால் வென்றவர். அடுத்த படமான போக்கிரி ராஜாவில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா என்று பெரிய காஸ்டிங் கிடைத்ததும் கதையில் கவனம் செலுத்தாமல் சொதப்பினார். அடுத்தது படம் கிடைக்கவில்லை.

    நலன் குமாரசாமி

    நலன் குமாரசாமி

    சூது கவ்வும் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் இரண்டாவது படத்தில் கவிழ்ந்தார். கொரியன் பட ரீமேக்கான காதலும் கடந்து போகும் ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை. இன்னும் படம் எதிலும் கமிட் ஆகவில்லை. அனேகமாக சூது கவ்வும் 2 எடுக்கலாம்.

    மணிமாறன்

    மணிமாறன்

    உதயம் என்ற படத்தை எடுத்தவர். அது வெற்றிமாறனின் திரைக்கதைக்காக பேசப்பட்டது. ஆனால் இரண்டாவது படமான புகழ் வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல அரசியல் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம். புரமோஷனும் இல்லை.

    சாம் ஆண்டன்

    சாம் ஆண்டன்

    ஜிவி.பிரகாஷுக்கு டார்லிங் படம் மூலம் வாழ்க்கை தந்தவர். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் உடனே ஜிவியை மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு இன்னொரு பேர் இருக்கு மூலம் கேரியரை கெடுத்துக்கொண்டார்.

    ரத்தினசிவா

    ரத்தினசிவா

    தனது முதல் படமான வா டீல் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம் அதுவும் விஜய் சேதுபதி கால்ஷீட்டில் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இன்னொரு பேரரசு படம் போலத்தான் அமைந்தது றெக்க.

    தனபால் பத்மநாபன்

    தனபால் பத்மநாபன்

    கிருஷ்ணவேணி பஞ்சாலை என்னும் படம் மூலம் கவனம் பெற்றவர் லுத்ஃபுதீன் நாசர், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், ஆர்ஜே பாலாஜியை வைத்து பறந்து செல்லவா படத்தை இயக்கினார். பஞ்சாலை தொழிலாளர்களின் அவலங்களை இயக்கியவரா இப்படி ஒரு படத்தை எடுத்தது என்ற அதிர்ச்சிதான் மிஞ்சியது.

    டீகே

    டீகே

    யாமிருக்க பயமேன் என்ற ஹாரர் காமெடி படம் தந்தவர். முதல் படம் ஹிட் ஆனதால் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா என்று நல்ல காஸ்டிங் கிடைத்தது. ஆனால் கதையில் கோட்டை விட்டதால் கவலை வேண்டாம் படமும் ஃப்ளாப் ஆனது. கதையை நம்பாமல் அடல்ட் காமெடியை நம்பியதால் வந்த வினை அது.

    கணேஷ் விநாயக்

    கணேஷ் விநாயக்

    தகராறு படம் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் கணேஷ் இரண்டாவது படமான வீர சிவாஜியை விக்ரம் பிரபு, ஷாம்லி வைத்து தொடங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சுமாராய் கூட போகவில்லை.

    இவர்கள் யாருக்குமே இன்னும் அடுத்த படம் கிடைக்கவில்லை.

    சுதா கொங்கரா (துரோகி,இறுதி சுற்று), அருண்குமார்(பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி), அட்லீ (ராஜா ராணி, தெறி), ஆனந்த் கிருஷ்ணன் (ஆள், மெட்ரோ), தரணிதரன் (பர்மா, ஜாக்ஸன் துரை), ராஜுமுருகன் (குக்கூ,ஜோக்கர்), ஆனந்த் ஷங்கர் (அரிமாநம்பி, இருமுகன்), ராஜபாண்டி (என்னமோ நடக்குது, அச்சமின்றி) என்று இரண்டாவது படத்தை ஹிட் ஆக்கிய இயக்குநர்களும் 2016 இல் உண்டு.

    இரண்டாவது படம் இயக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள்... என்னதான் நீங்க பெரிய மேதாவிகளாய் இருந்தாலும் ஒரு கதாசிரியரை பக்கத்துல வெச்சிக்குங்க... இல்லனா இப்படித்தான்...!
    - ஆர்ஜி

    English summary
    Here is the list of one film wonder directors in 2016 in Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X