»   »  ஒரு லட்சம் புதுப்பட டிவிடிகள் பறிமுதல்... நடிகர் சங்கத்தின் வேட்டை!

ஒரு லட்சம் புதுப்பட டிவிடிகள் பறிமுதல்... நடிகர் சங்கத்தின் வேட்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் தீவிர திருட்டு வீடியோ வேட்டையில் ஒரே நாளில் ஒரு லட்சம் திருட்டு டிவிடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு டிவிடி விற்கப்படும் கடையை போலீசார் நேற்று சோதனை செய்தனர்.

அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வீடியோ பைரசி கண்காணிப்பாளர் ஜெயலக்ஷ்மி ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் இந்த கும்பலை போலீசார் பிடித்தனர்.

அத்துடன் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள டிவிடிகளைும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இங்கிருந்துதான் தர்மபுரி , சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பத்து மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்து.

இதுகுறித்து விஷால் மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் புகாரின் அடிப்படையில் அங்குள்ள திருட்டு டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

English summary
After the sincere efforts of Nadigar Sangam, nearly 0ne lakh pirated DVDs of new Tamil movies seized by police on Monday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil