»   »  விக்ரம் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு ஹீரோ.. வைரலாகும் போட்டோ!

விக்ரம் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு ஹீரோ.. வைரலாகும் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிப்பில் குதிக்கும் விக்ரமின் மகனும் மருமகனும்!- வீடியோ

சென்னை : நடிகர் சீயான் விக்ரமின் சகோதரி மகனான அர்ஜுமன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரது மகன் துருவ்வையும் தற்போது சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பல படங்களில் நடித்து அனைவரின் அபிமானத்தையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய கதாநாயகன் அறிமுகமாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

துருவ்

துருவ்

பாலா இயக்கத்தில் 'வர்மா' படத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காகும். தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் நேபாளத்தில் நடைபெற்று வருகிறது.

அர்ஜுமன்

அர்ஜுமன்

இந்நிலையில், நடிகர் விக்ரம் தங்கை மகன் அர்ஜுமன், இன்னும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தற்போது அர்ஜுமனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

நடிப்பு கற்றவர்

நடிப்பு கற்றவர்

சினிமா பள்ளியில் நடிப்புக் கலையை முறையே பயின்றுள்ள அர்ஜுமனுக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தற்போது குடும்பத்தினரின் ஆதரவோடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன்.

நடிப்புக் குடும்பம்

நடிப்புக் குடும்பம்

பல படங்களில் நடித்து அனைவரின் அபிமானத்தையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய கதாநாயகன் அறிமுகமாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரமின் அப்பா விக்டரும் நடிகராக படங்களில் நடித்து சமீபத்தில் தான் காலமானது குறிப்பிடத்தக்கது.

Read more about: vikram son விக்ரம்
English summary
Actor Vikram is a leading actor in Tamil cinema. His son Dhruv has also introduced in cinema. In this case, Vikram's sister's son Arjuman is to act in Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X